ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செம உஷார் பார்ட்டி. தன்னிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் அவரிடம் தகராறு செய்துவிட்டு வெளியே போனால் தன் பெயரை எங்குமே பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்.

தீனா படம் தொடங்கி கஜினி வரை அவருடன் இருந்த சம்பத்குமார், அன்பு ஜி இருவரும் ஒரு கட்டத்தில் சண்டைபோட்டுவிட்டு வெளியே போனார்கள். சம்பத்குமார் தயாரிக்க, அன்பு ஜி இயக்கத்தில் இருவர் ஒன்றானால் என்ற படத்தை வெளியிட இருந்தபோது, விளம்பரங்களில் தன் பெயர் இடம்பெறுவதை முருகதாஸ் அனுமதிக்கவில்லை.

தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து தன் பெயரை நீக்கும்படி செய்தார்.  அதே முருகதாஸ், தன்னிடம் வேலை பார்த்தவர்கள் அவரது ஆசியுடன் தனியாக படம் பண்ணினால் அவர்களுக்கு ஆதரவாக இருப்பார். அவர்களின் படங்களை புரமோட் பண்ணவும் தயங்கமாட்டார்.

தற்போது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் - 'டிமான்ட்டி காலனி'. இப்படத்தை இயக்கியவர்.. ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அஜய் ஞானமுத்து. தன் உதவியாளர் இயக்கத்தில் வெளிவந்த டிமான்ட்டி காலனி படத்தைப் பாராட்டி தள்ளி இருக்கிறார் முருகதாஸ். "டிமான்ட்டி காலனி படம் பார்த்தேன்... செம த்ரில்லர்! அஜய்யை நினைத்தால் பெருமையாக இருக்கிறது.  

அருள்நிதியின் நடிப்பு, அரவிந்தின் ஒளிப்பதிவு, பின்னணி, சவுன்ட் எஃபெக்ட்ஸ் எல்லாமே அற்புதம்!" என பாராட்டி ட்வீட் செய்திருக்கிறார் முருகதாஸ். லாபிங் என்கிற இதுபோன்ற நெட்வொர்க்கிங் படத்துக்கு கூடுதல் பலமாக அமையும் என நம்புகின்றனர்.

 


Post your comment





Related News
கெளதம் மேனனை ரீ பிளேஸ் செய்த பிரபல பாலிவுட் இயக்குனர்!
டிமான்ட்டி காலனி ஆந்திராவில் ரிலீஸ்..!
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
2015ம் ஆண்டின் மூன்றாவது பேய்ப்பட வெற்றி
ஹீரோயினே இல்லாத டிமான்ட்டி காலனி
கமரகட்டு, டிமான்ட்டி காலனி படங்களில் ஆண் பேய்கள்!
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
பாலிவுட் செல்கிறது 7 ஜி ரெயின்போ காலனி
ஹீரோயின் பேரைச் சொல்லாமலேயே... திகில் கிளப்ப வரும் ‘டிமாண்டி காலனி’!
நயன்தாரா நடித்த பேய் படம் மாயாவை வாங்கியது ராம நாராயணன் நிறுவனம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions