விக்ரம்-முருகதாஸிற்குள் என்ன பிரச்சனை?

Bookmark and Share

விக்ரம்-முருகதாஸிற்குள் என்ன பிரச்சனை?

சீயான் விக்ரம் ஹேட்டர்ஸ் என்பதே இல்லாத நடிகர். விஜய், அஜித் ரசிகர்கள் கூட அவருக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய், அஜித் இவர்களின் திரைப்பயணத்தில் மிகவும் திருப்பம் தந்த இயக்குனர் முருகதாஸ். இவர் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் முருகதாஸுடன் கூட்டணி அமைப்பதாக இருந்தது.

தீனா படத்திற்கு பிறகு அந்த படம் தொடங்கவிருந்தது, ஆனால், விக்ரம் கடைசி நேரத்தில் அந்த படத்தை ட்ராப் செய்துவிட்டாராம். எந்த ஒரு காரணமும் சொல்லாமல் விக்ரம் இப்படி செய்தது முருகதாஸிற்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன் காரணமாகவே விக்ரம்-முருகதாஸ் இருவரும் நீண்ட நாட்களாக பேசவில்லையாம், இதை தொடர்ந்து 10 எண்றதுக்குள்ள படத்தை முருகதாஸ் தயாரித்ததன் மூலம் தான் இவர்கள் நட்பு மீண்டும் புதுப்பித்துள்ளது.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions