அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்

Bookmark and Share

அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்

ரஜினி நடிப்பில். ஷங்கரின் இயக்கத்தில், விரைவில் உருவாக உள்ள எந்திரன் 2 படத்தில், வில்லன் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ரஜினிகாந்த், தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில், கபாலி படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்திற்கு பிறகு, ஷங்கரின் இயக்கத்திலான "எந்திரன் -2" படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் ஹீரோயின் கேரக்டரில் காத்ரீனா கைப்பும் நடிக்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

எந்திரன் 2 படத்தில், முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது, பின், அஜித் அதிலிருந்து பின்வாங்கியதன் காரணத்தினால், ரஜினியே, அடுத்த பாகத்திலும் நடிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.

எந்திரன் 2 படம், தமிழ், ஹிந்தி் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளதால், வில்லன் கேரக்டரில் அமீர் கானை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டனர். கால்ஷீட் பிரச்னையால், அக்கேரக்டரில் நடிக்க அமீர் கானால் முடியவில்லை. பின் விக்ரமை படக்குழுவினர் அணுகினர்.

பின் அம்முடிவும் கைவிடப்பட்டது. இதனிடையே, எந்திரன் 2 படத்தில், வில்லன் கேரக்டரில், ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வோர்ஷனோகர் கலந்துகொண்டிருந்தார். அப்போது அர்னால்ட், இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் நடிக்க ஆவலாக இருப்பதாகவும், அது விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எந்திரன் 2 படத்தில் வில்லன் கேரக்டரில் நடிப்பதன் மூலம் அர்னால்டின் கனவு நிறைவேறுமா அல்லது வேறு யாராவது நடிக்க இருக்கிறார்களா என்பதன் பதில் இயக்குநர் ஷங்கரிடமே உள்ளது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions