டெல்லியில் 5–ந் தேதி பசுமை மாநாடு: நடிகர் அர்னால்டு பங்கேற்பு

Bookmark and Share

டெல்லியில் 5–ந் தேதி பசுமை மாநாடு: நடிகர் அர்னால்டு பங்கேற்பு

டெல்லியில் எரிசக்தி ஆய்வு மையம் சார்பில் வருகிற 5–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை 3 நாட்களுக்கு பசுமை மாநாடு நடைபெறுகிறது. இதில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் கார்பன் பயன்பாட்டை குறைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

இதில் பிரபல ஆலிவுட் நடிகரும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு கலந்து கொண்டு சுற்றுச்சூழலை பாதுகாப்பது பற்றி உரை நிகழ்த்துகிறார். இந்த மாநாட்டில் மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர், ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

அர்னால்டு கலந்து கொள்வதன் மூலம் இந்த மாநாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் என்று மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இதற்கு முன் 2007–ம் ஆண்டு 2012–ம் ஆண்டு நடந்த பசுமை மாநாட்டில் அர்னால்டு கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!
அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?
அர்னால்டை சந்திக்க அமெரிக்கா செல்லும் ரஜினி
அர்னால்ட் சம்பளத்தால் இரண்டு பாகமாகும் எந்திரன் 2?
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்
ரஜினியின் எந்திரன்-2 வில்லனை உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்!
எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!
ரஜினியுடன் இணையும் அர்னால்ட்
ஜாக்கிசானைப் போலவே வதந்தியில் சிக்கிய அர்னால்டு
அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions