ஜாக்கிசானைப் போலவே வதந்தியில் சிக்கிய அர்னால்டு

Bookmark and Share

ஜாக்கிசானைப் போலவே வதந்தியில் சிக்கிய அர்னால்டு

திரைப் பிரபலங்களைப்பற்றிய வதந்திகள் பரவுவது சர்வசாதாரணமாகி விட்டது. சமீபமாக சில நடிகைளின் ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப்புகளில் அணிவகுத்ததை அடுத்து, இப்போது ஹாலிவுட் பிரபலங்களை குறி வைத்து சில வதந்திகள் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றன.

அந்த வகையில், சமீபத்தில் உலக அளவில் ரசிகர்களை வைத்திருக்கும் ஜாக்கிசான் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. பின்னர் அது வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹாலிவுட்டின் அதிரடி நடிகரான அர்னால்டும் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாகவும் வாட்ஸ்அப்பில் செய்தி பரப்பி விட்டுள்ளனர்.

ஆனால் அர்னால்டு எவ்வித உடல்நலக்குறைவும் இன்றி நலமாக இருக்கிறார் என்பதுதான் உண்மை. தற்போது 68 வயதாகும் அர்னால்டு, டெர்மினேட்டர், சிக்ஸ்த் டே போன்ற படங்களில் நடித்து உலக ரசிகர்களை கவர்ந்திழுத்தவர்.

அதோடு இன்றுவரை கட்டுமஸ்தான நடிகர் என்கிற இலக்கணத்துக்குரியவராகவும் தனது உடல்கட்டை பராமரித்து வருகிறார். இந்த நிலையில், ரஜினி நடிக்கவிருக்கும் எந்திரன்- 2 படத்தில் அவரை வில்லனாக நடிக்க வைக்கும் முயற்சி நடப்பதாகவும் இன்னொரு செய்தி பல மாதங்களாக கோலிவுட்டில் உலவிக்கொண்டிருக்கிறது.

இதுவும் வதந்தியா, இல்லையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Post your comment





Related News
அர்னால்டை இயக்கும் தமிழ் இயக்குனர்; ஆனால் ஷங்கர் இல்லை – விவரம் உள்ளே!
அர்னால்டை நடிப்பை ஈடு செய்வாரா அக்‌ஷய் குமார்?
அர்னால்டை சந்திக்க அமெரிக்கா செல்லும் ரஜினி
அர்னால்ட் சம்பளத்தால் இரண்டு பாகமாகும் எந்திரன் 2?
'எந்திரன் 2' படத்திற்கு அர்னால்டு வைத்த செக்
ரஜினியின் எந்திரன்-2 வில்லனை உறுதிசெய்த தயாரிப்பு நிறுவனம்!
எந்திரன் 2 க்காக மேக்கப் டெஸ்ட்டுக்கு தயாரான அர்னால்டு!
ரஜினியுடன் இணையும் அர்னால்ட்
அர்னால்டு ரஜினி்க்கு வில்லன்
சைக்கிள் போட்டியில்கூட தோல்வியைத் தழுவ விரும்பாத அர்னால்ட்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions