ஆர்த்தி அகர்வால் மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

Bookmark and Share

 ஆர்த்தி அகர்வால் மரணத்தில் திடுக்கிடும் தகவல்!

தமிழில், ஸ்ரீகாந்த் நடித்த பம்பரக்கண்ணாலே நடித்தவர் நடிகை ஆர்த்தி அகர்வால் படத்தில். அதன்பின்னர் ரணம்-2 என்ற படத்தில் நடித்தார். ஆனால் அந்தப்படம் ரிலீஸாகவில்லை. தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாத ஆர்த்திக்கு தெலுங்கு சினிமா நல்ல பெயரை கொடுத்தது.

தெலுங்கில், சிரஞ்சீவி, நாகார்ஜூனா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான நுவுலேகா நேனுலேனு, இந்திரா, பாபி, வசந்தம் மற்றும் அடாவி ராமுடு உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

கடந்த 2007ம் ஆண்டு ஆர்த்தி அகர்வால், உஜ்வால் குமாரை என்பவரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். அதன்பின்னர் படங்களிலும் நடிப்பதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பாக சுவாசக்கோளாறால் அவதிப்பட்டு வந்த ஆர்த்தி, இருதினங்களுக்கு முன்னர் மாரடைப்பால் காலமானார்.

முன்னதாக கடந்த 2005ம் ஆண்டு ஆர்த்தி அகர்வால், தற்கொலைக்கு முயன்று பின்னர் உடல்நலம் தேறிவந்தார். சுவாசக்கோளாறு மற்றும் மாரடைப்பால் தான் ஆர்த்தி அகர்வால் மரணம் அடைந்தார் என முதலில் செய்தி வெளிவந்தது.

இந்நிலையில், ஆர்த்தி மரணத்திற்கு சுவாசக்கோளாறு மற்றும் மாரடைப்பு மட்டும் காரணம் இல்லையாம், திருமணத்திற்கு பிறகு ஆர்த்தி அகர்வாலின் உடல் எடை அதிகமாகி இருக்கிறது. இதனை குறைக்க அமெரிக்காவில் ஆபரேஷன் செய்துள்ளார்.

அவர் செய்து கொண்ட ஆபரேஷன் தவறாக முடிந்ததால் தான் ஆர்த்தி அகர்வாலுக்கு தொடர்ந்து மூச்சு திணறலும், அதனைத்தொடர்ந்து மாரடைப்பும் ஏற்பட்டதாக தற்போது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
வசூல் சாதனையில் சீமராஜா! - வேற லெவல் வரவேற்பு
ரசிகர்களுக்கு இரட்டை விருந்து கொடுக்கும் சிவகார்த்திகேயன்
ரஜினி படத்தில் இணையும் மேலும் ஒரு பிரபலம்
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
சிவகார்த்திகேயன் பட பாடல்களை வெளியிடும் கிரிக்கெட் பிரபலம்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
நடிகை ரோஹிணி 2 லட்சம் நிதி உதவி..!
கேரளா வெள்ள நிவாரணத்துக்கு விஜய் கொடுத்த நிதி- எவ்வளவு தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions