அருள்நிதி நிச்சயதார்த்தம் முடிந்தது - நீதிபதி மகளை மணக்கிறார்

Bookmark and Share

அருள்நிதி நிச்சயதார்த்தம் முடிந்தது - நீதிபதி மகளை மணக்கிறார்

தி.மு.க.தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதி. பாண்டிராஜ் இயக்கிய 'வம்சம்' படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் அருள்நிதி.

'வம்சம்'  படத்தை தொடர்ந்து 'மௌனகுரு', 'ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்', தகராறு என சில படங்களில் நடித்துள்ளார். அடுத்து அருள்நிதி நடிப்பில்  'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'டிமான்டி காலனி' ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன! இந்நிலையில், அருள்நிதிக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

அருள்நிதி மணக்கப் போகிறவரின் பெயர் கீர்த்தனா. இவர் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவரின் மகள். சென்னை தி.நகரில் உள்ள, ரெசிடென்சி டவர் நட்சத்திர ஓட்டலில் நிச்சயதார்த்தம் நடந்தது.

கருணாநிதி தலைமையில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்தத்தில் இரு குடும்பத்தினரின் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்!


Post your comment





Related News
மிஷ்கினுடன் சைக்கோ படத்தில் இணைந்த உதயநிதி
படிப்படியாக முன்னேறவே ஆசை: நடிகர் அருள்
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions