அருள்நிதி படத்தை மீண்டும் வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்

Bookmark and Share

அருள்நிதி படத்தை மீண்டும் வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்

பல படங்களைத் தயாரித்து ஹீரோவாக மாறிய அருள்நிதி இதுவரை அவர் நடித்த படங்களில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது டிமான்டி காலனி படம்தான். 

வித்தியாசமான ஹாரர் படமாக வெளிவந்த  டிமான்டி காலனி படத்தின் தரத்தை மட்டுமல்ல, வெற்றியையும் மிகச்சரியாய் கணித்து அப்படத்தை வாங்கி வெளியிட்டது ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி வாங்கிய படங்கள் எல்லாம் தொடர்ந்து வெற்றியடைவதைக் கண்டு, படம் எடுக்கும் பலரும் தங்கள் படத்தை வெளியிடும்படி முரளியை டார்ச்சர் செய்கின்றனர்

இதனால் முரளி சென்னையில் பெரும்பாலும் இருப்பதில்லை. தியேட்டர் புக்கிங், கலெக்ஷன் என்று ஒவ்வொரு ஊருக்கும்  சென்ற வண்ணம் இருக்கிறார்.

டிமான்டி காலனி படத்தின் வெற்றி சென்ட்டிமெண்ட் காரணமாக, தான்  அடுத்து நடிக்கும் படத்தையும் தேனாண்டாள் பிலிம்ஸ் முலமே வெளியிடுகிறார் அருள்நிதி. 

த்ரிஷ்யம் மலையாளப்படப் புகழ் ஜீத்து ஜோசஃப் இயக்கிய படம் மெமோரீஸ் மலையாள படத்தின் தமிழ் ரீமேக்கில்தான் தற்போது  நடிக்கிறார் அருள்நிதி. ஈரம், வல்லினம் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா தத்தா இரண்டு பேரும் நடிக்கிறார்கள்.


Post your comment





Related News
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
5 வயது குழந்தையின் அப்பாவாக நடிக்கும் அருள்நிதி
மலையாள ரீமேக்கில் நடிக்கும் அருள்நிதி
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
டிமாண்டி காலனி படப்பிடிப்பு தொடங்கியது
அருள்நிதி நடிக்கும் \"டிமான்டி காலனி\" ஹாரர் படம்!
பேய் படத்தில் நடிக்கும் அருள்நிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions