மலையாள ரீமேக்கில் நடிக்கும் அருள்நிதி

Bookmark and Share

மலையாள ரீமேக்கில் நடிக்கும் அருள்நிதி

சமீபத்தில் தமிழில் வெளிவந்த ‘பாபநாசம்’ படத்தின் இயக்குனர் ஜீத்து ஜோசப். இவர் மலையாளத்தில் இயக்கிய திரிஷ்யம் படத்தின் ரீமேக்தான் பாபநாசம். இந்நிலையில், இவர் மலையாளத்தில் இயக்கிய மற்றொரு படமும் தமிழில் ரீமேக்காகிறது.

அதாவது, ‘மெமோரிஸ்’ என்ற பெயரில் இவர் ப்ரித்விராஜை வைத்து மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கிய படம் தற்போது அருள்நிதி நடிப்பில் தமிழில் ரீமேக் ஆகவிருக்கிறது. இப்படத்தை ‘ஈரம்’, ‘வல்லினம்’ ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கவிருக்கிறார். ஸ்ரீதேனான்டாள் பிலிம்ஸ் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார்கள். இப்படம் க்ரைம் திரில்லராக உருவாக இருக்கிறது.


Post your comment





Related News
SP சினிமாஸ் தயாரிக்கும் அருள் நிதியின் படத்தில் கமிட்டான முன்னணி பிரபலம்.!
இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
5 வயது குழந்தையின் அப்பாவாக நடிக்கும் அருள்நிதி
அருள்நிதி படத்தை மீண்டும் வெளியிடும் தேனாண்டாள் பிலிம்ஸ்
அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு
டிமாண்டி காலனி படப்பிடிப்பு தொடங்கியது
அருள்நிதி நடிக்கும் \"டிமான்டி காலனி\" ஹாரர் படம்!
பேய் படத்தில் நடிக்கும் அருள்நிதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions