அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு

Bookmark and Share

அருள்நிதி படம் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகத்தின் காப்பியா?: கோலிவுட்டில் சலசலப்பு

அருள்நிதி நடிப்பில் தற்போது ரிலீசுக்கு தயாராக இருக்கும் படம் ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’. இப்படத்தை என்.ஜே.ஸ்ரீகிருஷ்ணா என்ற புதுமுக இயக்குனர் இயக்கி இருக்கிறார். ரம்யா நம்பீசன் நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜே.எஸ்.கே.பிலிம் கார்ப்பரேஷன் மற்றும் லியோ விஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

ஒரு கிராமம் தமிழ்நாட்டுக்கே முன்மாதிரியாக இருக்கிறது. எந்த குற்றச்செயல்களும் அங்கு நடக்காததால், அந்த ஊரில் போலீசுக்கு வேலை இல்லை. இதை மாற்ற நினைக்கும் நான்கு போலீஸ்காரர்கள் அந்த ஊருக்குள் பல குட்டி கலாட்டாக்களை செய்கிறார்கள். அவர்களால் அது முடிந்ததா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை. ஜாலியான, நகைச்சுவை மிகுந்த படமாக இது உருவாகியிருக்கிறது.

இந்நிலையில், இந்த படத்தின் கதை ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த ‘மாதவா கேசவா’ என்ற நாடகத்தின் காப்பி என்று தற்போது செய்திகள் பரவியுள்ளது. ‘மாதவா கேசவா’ நாடகத்திலும் நல்லா இருக்கும் ஒரு ஊருக்கு எதற்கு போலீஸ் ஸ்டேஷன் என்று வரும்போது இரண்டு போலீசார் குட்டிக் கலாட்டா செய்து அந்த ஊரிலேயே நிரந்தரமாக இருக்க நினைப்பார்கள்.

‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் படத்தின் கதையும் ‘மாதவா கேசவா’ நாடகத்தின் கதையும் ஒன்றுபோல் அமைந்துள்ளதால், அநேகமாக இந்த நாடகத்தை தழுவித்தான் இப்படத்தை எடுத்திருப்பார்கள் என்று கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.


Post your comment





Related News
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் இப்படி தான் இருக்கும் - இயக்குனர் வெளியிட்ட சூப்பர் தகவல்.!
அம்மாடி ஜனவரி 26-ல் மட்டுமே இத்தனை படங்கள் ரிலீஸா?
விளம்பரத்திற்காக ஒரு நட்சத்திர கிரிக்கெட் அணியை வாங்கிய விஜய் சேதுபதியின் படக்குழு.!
ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் படம் பற்றி தயாரிப்பாளர் அதிரடி அறிக்கை.!
நல்லக்கண்ணு, சகாயத்திடம் ஆசி பெறுங்கள்: புது கட்சி துவங்கிய இளைஞர்களுக்கு விவேக் அட்வைஸ்
நாலு போலீசுக்கு தடை கேட்டு வழக்கு
ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு!
மே 22ஆம்தேதி வெளியாகும் \'நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்\'
இயக்குனர் A. வெங்கடேஷ் ரொம்ப நல்லவன்டா நீ
ரொம்ப நல்லவன்டா நீ படத்திற்கு \'யு’ சான்றிதழ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions