அருள்நிதியின் அடுத்த படம்?

Bookmark and Share

அருள்நிதியின் அடுத்த படம்?

கடந்தஆண்டு டிமான்டிகாலனி மற்றும் நாலுபோலிஸூம்நல்லாஇருந்தஊரும் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்தார் அருள்நிதி.

இவ்விரண்டில் டிமான்டிகாலனி அவருக்கு நல்ல வரவேற்பைக் கொடுத்தது. இதனால் அப்படத்தை வெளியிட்ட தேனான்டாள் நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது நடித்துக்கொண்டிருக்கிறார். 

மலையாளத்தில் வெற்றி பெற்ற மெமரீஸ் படத்தின் தமிழாக்கமான ஆறாதுசினம் படத்தில் நடித்திருக்கிறார். ஈரம், வல்லினம் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கும் அந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.

அந்தப்படத்தைத் தொடர்ந்து எந்தப்படத்தில் நடிக்கப்போகிறார்? என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை.

2014 இல் சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்தை இயக்கிய வசந்தபாலன் சொன்ன கதை அருள்நிதிக்குப் பொருத்தமாக இருந்ததால் அந்தக்கதையில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. 

இதுபற்றிய அறிவிப்பு பொங்கல் கழித்து வெளியிடப்படும் என்றும் அதைத் தொடர்ந்து விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சொல்கிறார்கள்.

 


Post your comment





Related News
மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி!
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி!
ஷாருக்கான் பட பாணியில் உருவாகும் விவேக் – அருள்நிதி புதிய படம்!
மொழி பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி!
அருள்நிதியின் புதியபடம் ‘ஆறாது சினம்’
நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்துக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
அருள்நிதியுடன் மோதும் ஆவிகுமார் உதயா!
அருள்நிதி திருமணத்தில் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட விஜய்
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions