அருள்நிதியுடன் மோதும் ஆவிகுமார் உதயா!

Bookmark and Share

அருள்நிதியுடன் மோதும் ஆவிகுமார் உதயா!

திருநெல்வேலி உதயா நடித்து வருகிற 24-ந்தேதி திரைக்கு வரும் படம் ஆவிகுமார். காண்டீபன் இயக்கியுள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கனிகா திவாரி நடித்துள்ளார். அதோடு, விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் தேவா ஆகிய இருவரும் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர்.

இப்படத்தை கடந்த சில மாதங்களாகவே வெளியிட திட்டமிட்டு சரியான தியேட்டர்கள் கிடைக்காமல் பின்வாங்கிக்கொண்டிருந்த உதயா இந்த முறை தான் எதிர்பார்த்த மல்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் கிடைத்தால் 24-ந்தேதி படத்தை வெளியிட முடிவெடுத்து விட்டார்.

மேலும், அதே தேதியில் அருள்நிதி நடித்த நாலு போலீசும் நல்லா இருந்து ஊரும் என்ற படமும் திரைக்கு வருகிறது. 31-ந்தேதி திரைக்கு வர இருந்த இந்த படம், அன்றைய தேதியில் பல முன்னணி நடிகர்களின படங்கள் வெளியாவதால், ஒருவாரம் முன்கூட்டியே தியேட்டருக்கு வருகிறது.

அதோடு, குரு சுக்ரன், திரைப்பட நகரம் ஆகிய சிறிய படங்களும் திரைக்கு வருகின்றன. அதனால் அருள்நிதியும், உதயாவும்தான் வருகிற வெள்ளிக்கிழமையின்  நேரடிப் போட்டியாளர்களாகியிருக்கிறார்கள். 


Post your comment





Related News
மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி!
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி!
ஷாருக்கான் பட பாணியில் உருவாகும் விவேக் – அருள்நிதி புதிய படம்!
மொழி பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி!
அருள்நிதியின் அடுத்த படம்?
அருள்நிதியின் புதியபடம் ‘ஆறாது சினம்’
நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்துக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு
அருள்நிதி திருமணத்தில் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட விஜய்
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions