நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்துக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

Bookmark and Share

நடிகர் அருள்நிதி நடித்துள்ள படத்துக்கு தடை கேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை ஐகோர்ட்டில், எம்.எஸ்.கே.பிலிம் புரொடக்ஷன் நிறுவனத்தின் நிர்வாகி பி.நாகராஜ் ஒரு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- 

லியோ விஷன் நிறுவனத்தின் உரிமையாளர் வி.எஸ்.ராஜ்குமார், ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் அருள்நிதி கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் வெளிநாடுகளின் வினியோக உரிமையை என்னுடைய நிறுவனத்துக்கு வழங்குவதாக தயாரிப்பாளர் கூறியதை தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 9-ந் தேதி ஒப்பந்தம் செய்துகொண்டேன். அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், வெளிநாட்டு வினியோக உரிமைக்கு ரூ.21 லட்சம் நான் கொடுக்க வேண்டும். 

அதன்படி, ரூ.7 லட்சத்தை முன்தொகையாக கொடுத்துவிட்டேன். மீதமுள்ள தொகையை படம் வெளியாவதற்கு 3 நாட்களுக்கு முன்னர் வழங்க வேண்டும். இந்த நிலையில், இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் முழுவதும் முடிந்துவிட்டது. இந்த படத்தை விரைவில் வெளியிடப்போவதாக பத்திரிகைகளுக்கு தயாரிப்பாளர் விளம்பரம் செய்துள்ளார். 

இதையடுத்து பலமுறை அந்த தயாரிப்பாளரை தொடர்புகொள்ள முயற்சித்தும், அவர் பேசவில்லை. என்னிடம் முன்பணத்தை பெற்றுக்கொண்டு, அந்த படத்தின் வெளிநாட்டு உரிமையை வழங்காமல் உள்ளனர். எனவே, ‘நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்’ படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும். 

இவ்வாறு அதில் கூறியிருந்தார். 

இந்த மனு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சிவராமன் ஆஜராகி வாதிட்டார். பின்னர், மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.


Post your comment





Related News
மீண்டும் ராதாமோகன் இயக்கத்தில் அருள்நிதி!
மீண்டும் ஒரு ரிஸ்கான கதாபாத்திரத்தில் அருள்நிதி
விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி!
ஷாருக்கான் பட பாணியில் உருவாகும் விவேக் – அருள்நிதி புதிய படம்!
மொழி பட இயக்குனருடன் இணையும் அருள்நிதி!
அருள்நிதியின் அடுத்த படம்?
அருள்நிதியின் புதியபடம் ‘ஆறாது சினம்’
அருள்நிதியுடன் மோதும் ஆவிகுமார் உதயா!
அருள்நிதி திருமணத்தில் பட்டு வேஷ்டி - பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட விஜய்
நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions