விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி!

Bookmark and Share

விஜய் சேதுபதியை தொடர்ந்து அருள்நிதி!

வான்சன் மூவிஸ் சார்பாக ஷான் சுதர்சன் தயாரிப்பில் ராதாமோகன் இயக்கும் புதிய படம் கலைஞரின் பேரன் அருள்நிதி ஜோடியாக நடிகர் ரவிசந்திரனின் பேத்தி தான்யா நடிக்கிறார். அபியும் நானும், மொழி, பயணம் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய ராதாமோகன், கதை திரைக்கதை எழுதி புதிய படமொன்றை இயக்குகிறார்.

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற “சேதுபதி” படத்தை தயாரித்தவரும், தற்போது ஜெய், பிரணிதா நடிப்பில் மகேந்திரன் ராஜமணி இயக்கத்தில் தயாராகி வரும் “எனக்கு வாய்த்த அடிமைகள்”திரைப்படத்தை தயாரிப்பவருமான ஷான் சுதர்சன், வான்சன் மூவிஸ் சார்பாக இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தை
பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

வெற்றி நாயகன் அருள்நிதி கதாநாயகனாகவும், தான்யா கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். அருள்நிதி கலைஞரின் பேரன் என்பதும், தான்யா நடிகர் ரவிசந்திரனின் பேத்தி என்பதும், மேலும் இருவரும் கதாநாயகன் கதாநாயகியாக நடிப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் முக்கிய வேடத்தில் விவேக் நடிக்கிறார்.

பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் . ஜில் ஜங் ஜக் படத்தின் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் இசையையும், கதிர் கலை இயக்கத்தையும் மேற்கொள்ள,வசனம் பொன் பார்த்திபன் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் இதர தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.

 


Post your comment





Related News
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions