அவசரப்பட்ட அருண்பாண்டியன்!

Bookmark and Share

அவசரப்பட்ட அருண்பாண்டியன்!

லிங்கா படத்தின் பிரச்சனையின் தொடர்ச்சியாக, விஷால் நடித்த பாயும் புலி படத்தின் ரிலீஸ் பிரச்சனைக்குரியதாக மாறியது.  இது தொடர்பாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  கடந்த 4-9-2015 முதல் எந்த படமும் ரிலீஸ் ஆகாது என்று அறிவித்தது!  

மற்ற அமைப்புகள் கேட்டுக் கொண்டதால் அடுத்தநாளே தன் முடிவை கவுன்சில் மாற்றிக்கொண்டது. 4-9-2015 மஅன்று வெளியாக வேண்டிய அனைத்து படங்களும் திட்டமிட்டபடி வெளியாகின. இதற்கிடையில்  சவாலே சமாளி படத்தின் தயாரிப்பாளரான நடிகர் அருண்பாண்டியன் அவசரப்பட்டு  தயாரிப்பாளர் சங்கத்தைப் பற்றி கடுமையாய் சாடி பேட்டியளித்தார். 

அதோடு அறிக்கையையும் வெளியிட்டார். அருண் பாண்டியன் அளித்த பேட்டியும், கொடுத்த அறிக்கையும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்தது. அவர்களை தலைவர் தாணு சமாதானப்படுத்தியதாக சொல்லப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழுமை வெளியான படங்களில் சவாலே சமாளி படத்துக்கு ஓபனிங்கே இல்லை. 

அது மட்டுமல்ல, திரையிட்ட பல தியேட்டர்களிலிருந்து அந்தப் படத்தை எடுத்துவிட்டு தனி ஒருவன் படத்தைப் போட்டு பணத்தை அள்ள ஆரம்பித்துவிட்டனர். இதன் காரணமாக சவாலே சமாளி படத்தைத் தயாரித்த அருண்பாண்டியனுக்கு மட்டுமின்றி, அந்தப் படத்தை வாங்கிய திரையிட்டவர்களுக்கும் கணிசமாக நஷ்டம் ஏற்படுள்ளது. 

இந்தப் பிரச்சனை விரைவில் கவுன்சிலின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டால், அவர்கள்தான் பஞ்சாயத்து செய்து அருண்பாண்டியனை காப்பாற்ற வேண்டும். இதை எல்லாம் யேசிக்காமல் அவசரப்பட்டு கவுன்சிலை காய்த்து எடுத்துவிட்டார் அருண்பாண்டியன். இனி பஞ்சாயத்துக்கு கவுன்சில் நிர்வாகிகள் வருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
ஜோக்கர் நாயகியின் உண்மையான முகத்தை காட்டப்போகும் 'ஆண் தேவதை..!
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions