தயாரிப்பாளர் சிக்கலுக்கு உதவுங்கள்; நடிகர் அருண்பாண்டியன்

Bookmark and Share

தயாரிப்பாளர் சிக்கலுக்கு உதவுங்கள்; நடிகர் அருண்பாண்டியன்

கவிதா பாண்டியன், எஸ்.என்.ராஜராஜன் ஆகியோர் இணைந்து தயாரிக்க, சத்யசிவா இயக்கும் அசோக் செல்வன்-பிந்து மாதவி நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம்  சவாலே சமாளி.  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் அருண்பாண்டியன் பேசும்போது.

முன்பெல்லாம் படம் எடுத்து அதை வெளியீடுவது மிக எளிதாக இருந்தது.  பைனான்சியர்கள், வினியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள், நடிகர்கள் அனைவருக்கும் படம் தயாரிப்பில் பங்கு இருக்கும்.

இப்போது இப்போது படத்தின் பெரும்பகுதி பணம் நடிகர், நடிகைகள், இயக்குனர் ஆகியோருக்குத்தான் போகிறது. ஆனால் படம் ரிலீஸ் செய்யும் போது அந்த தயாரிப்பாளாருக்கு யாரும் உதவி செய்வதில்லை. படம் சேட்டிலைட் கூட விற்பதில்லை.

அனைத்தும் தயாரிப்பாளர் தலையில்தான் முடிகிறது. இதனால் சமீபத்தில் ஒரு தயாரிப்பாளர் தனது படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் சிலை கடத்தல் வரை சென்றுள்ளார்.  

இந்த படத்தை நானே சொந்தமாக உலக முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறேன் இதை கேள்வி பட்ட அசோக்செல்வன், பிந்துமாதவி இருவரும் தங்களது சம்பளத்தில் ஐந்து ஐந்து லட்சம் விட்டு தருவதாக கூறினார்கள்.  

நான் அவர்களது பெருந்தன்மையை மதித்து அவர்களுக்கு முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டேன். படத்தின் வெளியீட்டின் போது அந்த தயாரிப்பாளரின்  சிக்கல்களுக்காக ஒரு லட்சம் ரூபாய் கூட உதவ முன்வருவதில்லை இன்று பல கோடி சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள், இயக்குனர்கள்.


Post your comment





Related News
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions