லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்

Bookmark and Share

லிங்காவால் நானும் நஷ்டமடைந்தேன் - அருண்பாண்டியன்

விஷால் நடித்து வேந்தர் மூவிஸ் தயாரித்த பாயும் புலி படத்திற்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியது.  இதனால் செப்டம்பர் 4ஆம் தேதி முதல் பாயும் புலி உட்பட எந்த படத்தையும் வெளியிட மாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது.  அதற்கு விஷால் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெறிவிக்க அடுத்த கொஞ்ச நேரத்தில் அறிவிப்பை வாபஸ் பெற்றுவிட்டது.

அஷோக் செல்வன் பிந்துமாதவி நடித்திருக்கும் "சவாலே சமாளி" திரைப்படம் திட்டமிட்ட படி இன்று உலக முழுவதும் 170 இற்கு அதிகமான திரையரங்குகளில் வெளியாகும் என அதன் தயாரிப்பாளர்களான அருண்பாண்டியன் மற்றும் கவிதா பாண்டியன் நேற்று தெரிவித்திருந்தார்கள், அதே போல் படமும் இன்று ரிலீஸ் ஆனது.

இது குறித்து அவர்கள் இவ்விருவரும் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பது,

எங்களுடைய தயாரிப்பில் உருவான 'சவாலே சமாளி" படத்தை திடீரென நிறுத்த முடியாது. ஏனெனில் பல கோடி செலவில் சரியான திட்டமிடலுடன் படம் தயாரிக்கப்பட்டு ரிலீஸ் திகதியும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது. நல்ல விளம்பரமும் செய்யப்பட்டுள்ளது. நானே நினைத்தாலும் படத்தின் ரிலீசை நிறுத்த முடியாது.

காரணம் படம் ரிலீசுக்கான அணைத்து தொழில்நுட்ப ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படத்தை நிறுத்தினாலும் வெளிநாட்டில் படம் ரிலீஸ் ஆகும். கண்டிப்பாக திருட்டு வீ.சி.டி உள்ளிட்ட பல கடுமையான பாதிப்புகள் ஏற்படும். ஒரு தயாரிப்பாளராக எனக்கு கடுமையாக பிரச்சனைகள் ஏற்படும். 

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த திடீர் முடிவில் எந்த நியாயமும் இல்லை இன்னும் சொல்லப்போனால் லிங்கா படத்தை வெளிநாட்டில் ரிலீஸ் செய்ததே நான் தான்.  அந்த வகையில் நானும் கடுமையாக பாதிக்கப்பட்டேன்.  

அதை நான் இதுவரை எந்த மேடையிலும் சொன்னதில்லை. ஆனால் அவர்களாக நஷ்டத்தை ஈடுகட்டுவதாக சொன்னார்கள்; ஆனால் அதையும் செய்யவில்லை. செங்கல்பட்டு என்ற ஒரு குறிப்பிட்ட ஏரியாவிற்காக ஒட்டு மொத்த தமிழகம் முழுவதும் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்தது தவறானது என்று கூறினார்கள்.

இதனிடைய இன்று திட்டமிட்டப்படி விஷால் நடிப்பில் உருவான பாயும் புலி படமும் வெளியாகும் என்று விஷால் தெரிவித்து படமும் இன்று ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions