ஹாலிவுட் பாணியில் அர்ஜூனை இயக்கும் அருண் வைத்தியநாதன்!

Bookmark and Share

ஹாலிவுட் பாணியில் அர்ஜூனை இயக்கும் அருண் வைத்தியநாதன்!

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதனின் அடுத்த படம் அர்ஜுன் நடிக்க கப்பல் படத்தை தயாரித்த ஐ ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகிறது. அர்ஜுன் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படம் ஹாலிவுட் படங்களின் தர வரிசையில் தயார் ஆகிறது.  

பெயரிடப்படாத இந்தப் படத்தை பற்றி பேசிய இயக்குனர் அருண் வைத்தியநாதன், என் ஒவ்வொரு படமும் மற்றொரு படத்தில் இருந்து மாறுப்பட்டு இருக்க வேண்டும் என்பதில் நான் தீர்மானமாக இருப்பேன்.

 

அச்சமுண்டு அச்சமுண்டு ஒரு சமுதாய பிரச்சனையைப் பற்றிய படம் என்றால், மலையாளத்தில் மோகன் லால் சாரை வைத்து நான் இயக்கி பெரும் வெற்றி அடைந்தத பெருச்சாழி திரைப்படம் அரசியல் பற்றிய படமாகும். எனது அடுத்த படம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக அதற்கான கதை எழுதுவதில் சிறிது நேரம் எடுத்துக் கொண்டேன்.

அந்த நேரத்தில் என் மனத்தில் உதித்தது தான் இந்தப் படத்தின் மையக் கரு.அந்த கதை கருவை எனது நண்பர் ஆனந்த் ராகவ் உடன் இணைந்து மேலும் மேருகேற்றினேன்.

எனது தயாரிப்பாளர்கள் சுதன் இடமும், உமா ஷங்கர் இடமும் கதையைப் பற்றி விவாதித்தோம். எங்கள் மனதில் அந்த கதையின் நாயகன் பாத்திரத்துக்கு அர்ஜுன் சார் தான் பொருத்தமாக இருப்பார் என தோன்றவே அவரை அணுகினோம்.

ஒரு காவல் துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தோற்றத்திலும் சரி, செயல் வடிவிலும் சரி, அவர் ஒருவரே பொருத்தமாக இருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ஒரு சினிமா போலீசாக இல்லாமல் நிஜத்தில் ஒரு காவல் அதிகாரி எப்படி நிதானமாக ஆழமாக ஒரு பிரச்சனைக்கு தீர்வுக் காண்பாரோ அந்த ஆழத்தை அர்ஜுன் சாரின் கதாபாத்திரம் வெளிப்படுத்தும். பல்வேறு நாடுகளிலும் படமாக்கப்பட இருக்கும் இந்தப்படத்தில் மேலும் பல நட்சத்திரங்கள் நடிக்க உள்ளனர்.

சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் வகையில் படமாக்கபடும் இந்த படம் உருவாக என்னுடன் தலை சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் இணைந்தது பணியாற்ற உள்ளனர் எனக் கூறினர்.


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions