குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அருண் விஜய் கைது!

Bookmark and Share

குடி போதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அருண் விஜய் கைது!

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனும் பிரபல நடிகருமானவர் அருண் விஜய். அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்ததன் மூலம் இவர் தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது ஆட்டத்தை தொடங்கினார்.

தற்போது இவரது நடிப்பில் வா டீல், குற்றம் 23 ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில் நேற்று இவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடிகை ராதிகா சரத்குமார் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகாலை 3 மணியளவில் வீடு திரும்பினார்.

அப்போது அளவுக்கு அதிகமாக குடித்திருந்த அவர், போதையிலேயே கார் ஓட்டி நுங்கம்பாக்கம் காவல் நிலையம் முன்பாக நின்று கொண்டிருந்த போலீசாரின் வாகனத்தின் மீது மோதினார்.

இதில் அருண் விஜய்க்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றாலும் போலீஸார் வாகனங்களை சேதம் செய்ததற்காக அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீஸார் அவரை கைது செய்தனர்.

இதையறிந்த அவரது தந்தை நடிகர் விஜயகுமார் உடனடியாக காவல் நிலையம் விரைந்தார். பின்னர் சிறுது நேரம் கழித்து நடிகர் அருண் விஜய், தனது தந்தையுடன் வீடு திரும்பினார்.

 


Post your comment

Related News
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions