தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அருண் விஜய்

Bookmark and Share

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த அருண் விஜய்

தற்போதுள்ள முன்னணி நடிகர்கள் பலர் தயாரிப்பாளராக மாறி வருகின்றனர். சூர்யா ‘2டி’ என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்து வருகிறார்.

அதுபோல், விஷால் ‘விஷால் பிலிம் பேக்டரி’, தனுஷ் ‘உண்டர்பார்’, விஜய் சேதுபதி ‘விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ்’, ஆகியவை மூலம் படம் தயாரித்து வருகின்றனர். சமீபத்தில் பிரபு தேவாவும் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துவிட்டார்.

அந்த வரிசையில் தற்போது அருண் விஜய்யும் இணைந்துவிட்டார். இவர் ‘இன் சினிமாஸ் என்டர்டெயின்மென்ட்’ என்ற நிறுவனம் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கவுள்ளார்.

இதன் மூலம் புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும், திறமையிருந்தும் சாதிக்க வாய்ப்பிலாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவுவதற்காகவே இந்த சினிமா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாகவும் அருண் விஜய் கூறியுள்ளார். 

கவுதம் மேனனின் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'என்னை அறிந்தால்' படம் அருண் விஜய்க்கு ரீஎன்ட்ரியாக அமைந்தது. சிம்புவை வைத்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை இயக்கி வருகிறார்.  இப்படத்தை முடித்தவுடன் கவுதம் மேனன் இயக்கத்தில் அருண் விஜய் மீண்டும் நடிக்க இருக்கிறார்.

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘வா’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தவிர தெலுங்கில் ராம்சரண் தேஜா மற்றும் கன்னடத்தில் புனீத் ராஜ்குமார் நடிக்கும் படங்களிலும் முக்கிய கேரக்டரில் அருண்விஜய் நடித்து வருகிறார்.

 


Post your comment





Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions