அப்பாவுடன் நடித்ததற்கு நன்றி : அஜித் மகளின் அன்பில் நெகிழ்ந்த அருண் விஜய்

Bookmark and Share

அப்பாவுடன் நடித்ததற்கு நன்றி : அஜித் மகளின் அன்பில் நெகிழ்ந்த அருண் விஜய்

எத்தனையோ படங்களில் ஹீரோவாக நடித்திருந்தும் இனிமேல் தேறவே மாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்த அருண்விஜய் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களின் பெரும் கவனத்தை ஈர்த்திருக்க.

தியேட்டருக்கு போன அவரை அஜித் ரசிகர்கள் தூக்கி வைத்து கொண்டாடிய போது அந்த இடத்திலேயே ஆனந்தக் கண்ணீர் விட்டார் அருண்விஜய். அந்தளவுக்கு அந்தப்படத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டிய அவருக்கு தினமும் பாராட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. என்றாலும் ஒரே ஒரு வி.ஐ.பி எழுதிய கடிதத்தை மட்டும் இன்றுவரை சிலாகித்து எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார் அருண்விஜய்.

அஜித்தின் மகள் அனோஷ்கா தான் அந்த வி.ஐ.பி.

என்னை அறிந்தால் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்து முடித்தவுடன் அருண்விஜய்யை சந்தித்த அனோஷ்கா, இந்தாங்க அங்கிள் என்று அவர் கையில் ஒரு கடிதத்தை கொடுத்திருக்கிறார்.

அந்த கடிதத்தில் முதல்முறையாக வில்லன் கேரக்டரில் நடித்த உங்களுக்கு பாராட்டுக்கள். இந்த படத்தில் நீங்கள் நடித்த காட்சிகளை நான் மிகவும் ரசித்தேன். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் உங்கள் நடிப்பு அற்புதம். என் அப்பாவுடன் நடித்ததற்கு நன்றி என்று எழுதியிருந்தாராம்.

அந்த கடிதத்தை ஒரு பொக்கிஷம் போல பாதுகாத்து வருகிறார் அருண்விஜய். மேலும் என்னை அறிந்தால் படம் ஹிட்டானதைத் தொடர்ந்து தனது சொந்தக் கம்பெனியில் தயாராகி வரும் வா டீல் படத்தை ரிலீஸ் செய்யும் வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார்.

வா டீல் படத்தில் அருண்விஜய், வம்சி கிருஷ்ணா, கார்த்திகா நாயர், சதீஷ், ஜெயப்பிரகாஷ், ரேணுகா மற்றும் பலர் நடித்துள்ளனர். சிவஞானம் இயக்கத்தில் தயாராகியுள்ள இப்படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions