அருண் விஜய்யின் வா டீல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

Bookmark and Share

அருண் விஜய்யின் வா டீல் படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியீடு

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் அருண் விஜய். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அருண் விஜய்யின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இது அவருக்கு பேர் சொல்லும் படமாகவும் அமைந்தது.

இப்படத்தில் நடிப்பதற்கு முன்னதாகவே ‘வா டீல்’ என்னும் படத்தில் அருண் விஜய் நடித்து வந்தார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று காலை வெளியிட உள்ளனர். இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக கார்த்திகா நடித்திருக்கிறார். மேலும் வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தை சிவஞானம் இயக்கியுள்ளார்.

தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது. விரைவில் இப்படத்தின் ஆடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளனர். 


Post your comment





Related News
கஜா புயல் பாதிப்பு - ஓசையில்லாமல் உதவிய விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகள் பேட்டி
சூப்பர் ஸ்டாராக கலக்கிய விஜய் சேதுபதி
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions