மீண்டும் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்

Bookmark and Share

மீண்டும் வில்லனாக நடிக்கும் அருண் விஜய்

அஜித் நடிப்பில் வெளிவந்த என்னை அறிந்தால் படத்தின் மூலம் முதன்முதலாக வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு அந்த படம் மிகப்பெரிய பெயரை ஏற்படுத்திக் கொடுத்தது. அருண் விஜய் கதாநாயகனாக நடித்த போது அவருக்கு கிடைக்காத வரவேற்பு வில்லனாக நடித்த முதல் படத்திலேயே அவருக்கு மிகப்பெரியளவில் கிடைத்தது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் வில்லனாக நடிக்கவுள்ளார். ஆனால் இந்த முறை இவர் நடிக்க இருப்பது தமிழ் படம் அல்ல. தெலுங்கில் வில்லனாக அறிமுகமாகவுள்ளார். 

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அருண் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்குகிறார்.

இதில் ராம் சரணுக்கு வில்லனாக நடிக்க, பல்வேறு நடிகர்களை இயக்குனர் தேடிவந்த நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தை பார்த்த ஸ்ரீனு வைட்லா, அருண் விஜய்யின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறார். இதனால் அருண் விஜய்யை ராம் சரணுக்கு வில்லனாக நடிக்க தேர்வு செய்திருக்கிறார் இயக்குனர்.


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்
சர்கார் அரசியல் கதை கிடையாது! கதை பற்றிய உண்மையை போட்டுடைத்த நடிகர்
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions