மகனின் தைரியத்தை பார்த்து அசந்துபோன அருண் விஜய்!

Bookmark and Share

மகனின் தைரியத்தை பார்த்து அசந்துபோன அருண் விஜய்!

தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்த அருண் விஜய், அஜித் நடிப்பில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படத்தின் மூலம் வில்லனாக பேசப்பட்டதால் தொடர்ந்து இவருக்கு வில்லன் வேடங்களில் நடிக்கவே வாய்ப்புகள் வருகிறது. 

அதன்படி, தற்போது கன்னட படம் ஒன்றில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க அவரது மகன் அர்னவும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்திருந்தான். 

அப்போது, அருண் விஜய் 10-வது மாடியில் இருந்து கயிற்றின் உதவியோடு கீழே குதித்து சண்டை போடும் காட்சி படமாக்கப்பட்டது. இதை பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த அர்னவ், தானும் அதுபோல் ஸ்டண்ட் காட்சியில் நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளான். 

அவனது ஆசையை நிறைவேற்ற 10-வது மாடியில் இருந்து கயிறு மூலம் அவனை இறக்கி, ஸ்டண்ட் செய்யும் காட்சியை படமாக்கியுள்ளார்கள். இந்த சிறுவயதிலும் மகனின் தைரியத்தை பார்த்து அருண் விஜய் அசந்து போனாராம். 

இந்த ஸ்டண்ட் காட்சி படத்தில் இடம்பெறாது என்றும், தனது மகனின் ஆசைக்காகவே இதை படமாக்கினோம் என்றோம் அருண் விஜய் கூறினார்.

 

 


Post your comment





Related News
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஜய் தேவரகொண்டா படம் வெளியாகும் முன்பே இணையதளத்தில் வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ்
தளபதி 63 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு
விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions