பிரேமம் இயக்குனருடன் இணையும் அருண் விஜய்?

Bookmark and Share

பிரேமம் இயக்குனருடன் இணையும் அருண் விஜய்?

2013 ஆம் ஆண்டு தமிழில் நேரம், 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் பிரேமம் ஆகிய இரண்டுபடங்களை இயக்கியிருக்கும் அல்போன்ஸ்புத்திரனின் அடுத்தபடம் பற்றிப் பல்வேறு தகவல்கள் உலவிக்கொண்டிருக்கின்றன.

அல்போன்ஸ் அடுத்து இந்தியில் படமெடுக்கப்போகிறார் என்று சொல்லப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் படமெடுக்கவிருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அடுத்தபடத்தைத் தமிழில்தான் எடுக்கப்போகிறார் என்று சொல்கிறார்கன்.

அந்தப்படத்தில் கதாநாயகனாக நடிக்க அருண்விஜய்யை ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.  அருண்விஜய்யோடு மலையாளத்திலிருந்து மம்முட்டி அல்லது மோகன்லால் போன்றொரு பெரியநடிகரும் நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதுதொடர்பான பேச்சுவார்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றும் பெரும்பாலும் இதன்படியே நடக்க வாய்ப்பு இருக்கிறதென்றும் சொல்கிறார்கள். என்னைஅறிந்தால் படத்துக்குப் பிறகு தெலுங்கு மற்றும் கன்னடப்படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு இந்தப்படம் பெரிதாக அமையும் என்றும் சொல்கிறார்கள்.   


Post your comment





Related News
விஜய்யின் அட்வைஸ்தான் என்னை இந்தளவிற்கு கொண்டுவந்துள்ளது - ஜெய்
தளபதி 63 படத்தின் புதிய அப்டேட்
கதாநாயகியாக களமிறங்கும் அருண் பாண்டியன் மகள்
மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் - எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு
அருண் விஜய் படத்தில் குத்துச்சண்டை நடிகை
தளபதி 63 - அறிமுக பாடலில் விஜய்யுடன் நடனமாடும் 100 குழந்தைகள்
கந்துவட்டி கும்பலுடன் எனக்கு தொடர்பா? - கருணாகரன் விளக்கம்
நாயகியின் உதட்டை கடிக்கவில்லை - வெட்கத்துடன் கூறும் அருண்விஜய்
சபரிமலை விவகாரம் - விஜய் சேதுபதி கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும்
தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions