வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்த அருண் விஜய்?

Bookmark and Share

வில்லன் வேடத்தில் நடிக்க மறுத்த அருண் விஜய்?

‘என்னை அறிந்தால்’ படத்தில் விக்டர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார் அருண் விஜய். இப்படத்தை தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருக்கிறார் என்று இவரை வில்லனாக தங்கள் புக் செய்ய இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் தயாராகினார்கள்.

ஆனால், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய் மறுப்பு தெரிவிப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. கன்னட படத்தில் இவருக்கு வந்த வில்லன் வாய்ப்பை உதறித் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த ‘இவன் வேற மாதிரி’ படத்தின் கன்னட ரீமேக்கில் புனித் ராஜ்குமார் நடிக்கிறார். இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க அருண் விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதை அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், அருண் விஜய்யின் நெருங்கிய வட்டாரங்களில் இதுகுறித்து விசாரிக்கும்போது, புனித் குமார் நடிக்கும் கன்னட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அருண்விஜய்யை அழைத்து உண்மைதான். ஆனால், அப்படத்தில் நடிப்பது குறித்து அருண் விஜய் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறுகின்றனர். 


Post your comment





Related News
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
சீனாவில் 10,000 தியேட்டர்களில் ரிலீஸாகும் விஜய்யின் மெர்சல்
மிமிக்ரி கலைஞரை மணக்கிறார் பிரபல பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமி
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு அடுத்த மாதம் திருமணம்
ஒரே மேடையில் தோன்றும் ரஜினி, விஜய்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions