குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட அருண்விஜய் ஜாமீனில் விடுதலை!

Bookmark and Share

குடிபோதையில் வாகனத்தை ஓட்டியதற்காக கைது செய்யப்பட்ட அருண்விஜய் ஜாமீனில் விடுதலை!

குடிபோதையில் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண் விஜய் வழக்கை விசாரித்த போலீஸ் உதவி கமிஷனர் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரில் நிறுத்தப்பட்ட போலீஸ் வேன் மீது கடந்த 26ம் தேதி இரவு  நடிகர் அருண் விஜய் குடிபோதையில் ஓட்டிய சொகுசு கார் மோதியது.

இதில் வேன் சேதம் அடைந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தி அருண் விஜய் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அருண் விஜய்யின் சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையின் போது போலீசுக்குப் பயந்து அருண் விஜய் தப்பி ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரை கைது செய்ய போலீஸார் முயற்சிகள் எடுத்து வருவதாகவும் செய்திகள் வந்தன.

இந்த வழக்கில் போக்குவரத்து உதவி கமிஷனர் ஜெகதீசன், இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் அலட்சியமாக செயல்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், சம்பந்தப்பட்ட உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்தார்.

உதவி கமிஷனர் ஜெகதீசன், காத்திருப்பு பட்டியலிலும், இன்ஸ்பெக்டர் சதீஷ் ரயில்வே போலீசுக்கும் மாற்றப்பட்டார்.இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, "விபத்து நடந்த போது உதவி கமிஷனர் ஜெகதீசன், ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சம்பவ நடந்த இடத்துக்கு சென்று அவர் விசாரணை நடத்தவில்லை.

மேலும், நுங்கம்பாக்கம் போலீஸார், அருண் விஜய்யை விசாரித்து பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசிடம் ஒப்படைத்தனர். அப்போது அருண் விஜய்யை போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லாமல் அவருடைய காரில் போலீஸ் நிலையத்துக்கு வர போலீஸார் அனுமதித்துள்ளனர். ஆனால், அவர் போலீஸ் நிலையத்துக்கு வரவில்லை. பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக இன்ஸ்பெக்டர் சதீஷ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது"என்றார்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் அருண் விஜய் பரங்கிமலையில் உள்ள, போக்குவரத்து துணை ஆணையர் அலுவலகத்தில் இன்று மதியம் ஆஜரானார்.பிறகு,அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பிறகு அவர் கைது செய்யப்பட்டு, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து நடிகர் விஜயகுமாரிடம் கேட்டபோது, 

''என் மகன் அருண்விஜய்  கடந்த   25-ம் தேதி இரவு  ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையம் வழியாக ஆடி காரில் வந்துகொண்டு இருந்தார். அப்போது காரை இயக்கும்போது  சிறிய கவனக்குறைவால் எதிரில் இருந்த போலீஸார் வாகனத்தில் மேல் மோதிவிட்டது அதனால் காரில்  லேசான உரசல் ஏற்பட்டது.

போலீஸ் வாகனத்தில் ஏற்பட்ட சேதத்தை சரிபார்த்து தருமாறு போலீஸார் கேட்டுக் கொண்டனர். நாங்களும் பழுது பார்த்து தருவதாக ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தோம். அதன்பின் அவர்களாகத்தான் அருண்விஜய்யை போகச் சொன்னார்கள். 

திடீரென காவல் நிலையத்தைவிட்டு அருண்விஜய் ஓடிவிட்டதாக யாரோ செய்தியை பரப்பி விட்டனர். ஏதோ பெரிய குற்றத்தை அருண்விஜய் செய்து விட்டதுபோல் சிலர் ஒரு பூதாகர தோற்றத்தை உருவாக்கி விட்டனர். இன்று நீதிமன்றத்தில் ஆஜரானோம்  அருண்விஜய்க்கு ஜாமின் வழங்கப்பட்டது.

இனிமேல்  எங்களைப்பற்றி  ஏதாவது தவறான செய்தி  பரப்பபட்டால் எங்களுக்கு போன் செய்து உண்மையை தெளிவுபடுத்த்க் கொள்ளுங்கள் என்று  கேட்டுக் கொள்கிறேன் '' என்று விளக்கம் சொன்னார்


Post your comment

Related News
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
விஜய் 63 படத்தின் முக்கிய தகவல்
விஜய் வில்லனுக்கு ஜோடியான பாவனா
குறும்படத்தை இயக்கி நடித்த விஜய் மகன்
இந்தியாவிலேயே நம்பர் 1 தளபதி விஜய் தான், டிக் டாகில் இத்தனை கோடியா? செம்ம மாஸ்
இந்த வருடம் வெளியான 171 படங்கள் : அதிகம் வசூலித்த ‘2.0’, ‘சர்கார்’
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
முதல்வன் 2 படத்தில் விஜய் நடிப்பாரா?
பெரிய ஆள எதிர்த்தா தான் பெரிய ஆளாக முடியும் - வில்லனாக நடித்தது குறித்து விஜய் சேதுபதி பேச்சு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions