அருண் விஜய் அடுத்த தமிழ்ப்படம்!

Bookmark and Share

அருண் விஜய் அடுத்த தமிழ்ப்படம்!

ஈரம், வல்லினம் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இப்போது அருள்நிதி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஐஸ்வர்யதத்தா ஆகியோர் நடிக்கும் ஆறாதுசினம் படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். மலையாளத்தில் வெற்றி பெற்ற மெமரீஸ் படத்தின் தமிழாக்கம்தான் இந்தப்படம்.

இந்தப்படத்தைத் தேனான்டாள்பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அறிவழகனின் முந்தைய படங்கள் வருடக்கணக்கில் நடந்துகொண்டிருந்தன. இந்தப்படத்தை நவம்பரில் தொடங்கினார், இப்போது படப்பிடிப்பு முழுமையடைந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவே ஆச்சரியம், இதற்கடுத்த ஆச்சரியமாக அறிவழகன் பொங்கலுக்குப் பிறகு அடுத்தபடத்தைத் தொடங்குகிறார் என்று சொல்லப்படுவது.

என்னைஅறிந்தால் படத்தில் அஜித்துடன் விக்டர் என்கிற வேடத்தில் நடித்துப் பெரும் வரவேற்பைப் பெற்ற அருண்விஜய், அதற்கடுத்து தமிழில் எந்தப்படத்தையும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. தெலுங்கு மற்றும் கன்னடப்படங்களில்தான் நடித்துக்கொண்டிருக்கிறார். ஜனவரி மாதம் தமிழில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்தபடத்தின் அறிவிப்பு இருக்கும் என்று அவர் சொல்லியிருந்தார்.

அறிவழகன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் அருண்விஜய்தான் கதாநாயகன் என்று சொல்லப்படுகிறது. எல்லாப்பேச்சுகளும் முடிவடைந்து அறிவிக்கும் நிலையில் இந்தப்படம் இருப்பதாகச் சொல்கிறார்கள். இந்தப்படத்துக்குச் சிறை என்று பெயர் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

என்னைஅறிந்தால் படத்தில் அருண்விஜய்க்குக் கிடைத்த வரவேற்பைத் தக்கவைக்கிற அளவு இந்தப்படம் இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions