பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’

Bookmark and Share

பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’

அருண் விஜய் நடிப்பில், மெடிக்கல் – கிரைம் – திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் ‘குற்றம் 23’ திரைப்படம், வருகின்ற பொங்கல் அன்று வெளியாக இருக்கின்றது. அறிவழகன் இயக்கத்தில் ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்பை பெற்று இருக்கும் இந்த திரைப்படத்தை, ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் சார்பில் இந்தெர் குமார் தயாரித்து இருக்கிறார்.

மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கும் குற்றம் 23 படம், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் கே எம் பாஸ்கரன், படத்தொகுப்பாளர் புவன் ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் விவேகா மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஹீரா அறிவழகன் என வலுவான தொழில் நுட்ப கலைஞர்கள் பலரை உள்ளடக்கி இருப்பது மேலும் சிறப்பு.

“நல்லதொரு நாளன்று திரைப்படத்தை வெளியிடுவது தான் எல்லா தயாரிப்பாளர்களின் விருப்பமாக இருக்கும்….அந்த வகையில், தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் எனக்கு, ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொண்டாடுகின்ற பொங்கல் திருநாள் அன்று குற்றம் 23 திரைப்படத்தை வெளியிடுவதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கின்றது….

பொங்கல் திருநாளை கொண்டாடும் ஒவ்வொரு ரசிகர்களின் மகிழ்ச்சியையும் இரட்டிப்பாக்கும் சிறப்பம்சங்கள் எங்கள் குற்றம் 23 படத்தில் முழுமையாக நிறைந்திருக்கின்றது….”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் குற்றம் 23 படத்தின் தயாரிப்பாளரும், ‘ரெதான் – தி சினிமா பீப்பல்’ நிறுவனத்தின் நிறுவனருமான இந்தெர் குமார்.


Post your comment





Related News
தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்! பார்த்து வியந்த பிரபல நடிகர்
த்ரில்லர் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்
அருண் விஜய்யின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா? ரசிகர்கள் உற்சாகம்
அவரே பாராட்டிவிட்டார் – உச்சகட்ட குஷியில் குற்றம் 23 படக்குழு!
குற்றம்-23 பிரமாண்ட வசூல்- முழு விவரம்
நடிகர், நடிகைகளின் நம்பிக்கையை இயக்குனர்கள் காப்பாற்றுவதில்லை: சுஜா வருணி
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
இயக்குனர்கள் ஏன் இப்படி நடந்து கொள்கிறார்கள்? பிரபல நடிகை உணர்ச்சிவசம்
குற்றம்-23 இரண்டு நாள் பிரமாண்ட வசூல்
என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions