அருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்?

Bookmark and Share

அருண்விஜய் வீட்டில் காணாமல் போன அந்த நபர் யார்?

அருண் விஜய்யை சுற்றி தற்போது சோகமான சம்பவங்களே நடந்தேறி வருகிறது. சமீபத்தில் போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார்.

அந்த சோகம் மறைவதற்குள்ளாகவே தற்போது மேலும் ஒரு சோகம் அவரை பிடித்துக் கொண்டது.இந்த முறை அவரது வீட்டில் உள்ள முக்கியமான ஒருவர் காணாமல் போயுள்ளார். அவர் வேறு யாருமல்ல? இவர் செல்லமாக வளர்த்த நாய்க்குட்டிதான். கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் இவர் செல்லமாக வளர்த்து வந்த Lhasa Apso வகையைச் சேர்ந்த நாய்க்குட்டி காணாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

அந்த நாய்க்குட்டியை யாராவது கண்டுபிடித்தால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் அந்த நாய்க்குட்டியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அருண்விஜய்யின் வீடு ஈக்காட்டுதாங்கலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது அருண்விஜய் நாய்க்குட்டி தொலைந்துபோன சோகத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருடைய நடிப்பில் தற்போது ‘குற்றம் 23’ என்ற படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. விரைவில் இப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions