கார் விபத்திலிருந்து உயிர் தப்பிய அருண் விஜய்

Bookmark and Share

கார் விபத்திலிருந்து உயிர் தப்பிய அருண் விஜய்

அருண் விஜய், கார்த்திகா நாயர் நடிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘வா’. இப்படத்தை ரத்தின சிவா என்பவர் இயக்கியிருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற மே மாதத்தில் இப்படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் கவுதம் வாசுதேவ் மேனன், லிங்குசாமி, எஸ்.பி.ஜனநாதன், ஏ.வெங்கடேஷ், ரேணிகுண்டா இயக்குனர் ஆர்.பன்னீர்செல்வம் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் அருண் விஜய் பேசும்போது, இந்த படத்தின் முதல்நாள் படப்பிடிப்பின்போது கார்த்திகா காரை ஓட்டுவதுபோலவும், நானும், சதீஷும் அந்த காரில் பயணிப்பதுபோலவும் படமாக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குனர் கார்த்திகாவிடம் டயலாக் எல்லாம் சொல்லிவிட்டு படப்பிடிப்பை நடத்த தயாரானார். அவரும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, நடிக்க தயாராக இருந்தார். அப்போது, கார்த்திகா நாயர் என்னிடம் காரின் கியரை எப்படி போடுவது என்று கேட்டார். அதைக் கேட்டதும் நானும், சதீஷும் பயந்துவிட்டோம்.

கார் ஓட்டத் தெரியாதவரை வைத்து இந்த காட்சியை எப்படி எடுப்பது என்று குழம்பி இயக்குனரிடம் கேட்டோம். அவர், படம் ஆரம்பிப்பதற்கு முன்பே, கார்த்திகாவின் அம்மா ராதாவிடம் இந்த படத்தில் கார் ஓட்டுவது போன்று காட்சி இருக்கிறது என்று விளக்கி கூறியதாகவும், அதற்கு ராதா, கார்த்திகாவுக்கு நன்றாக கார் ஓட்டத் தெரியும் என்று கூறியதாகவும் எங்களிடம் கூறினார். ஆகையால், கார்த்திகா சும்மா தமாஷுக்காகத்தான் அப்படி சொல்கிறார் என்று நினைத்து படப்பிடிப்பை தொடங்கினோம். ஆனால், உண்மையிலேயே கார்த்திகாவுக்கு கார் ஓட்டத் தெரியவில்லை.

படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போது கார்த்திகா காரில் உள்ள பிரேக்கை அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திவிட்டார். உடனே கார் தாறுமாறாக ஓடியது. உடனே நான்  சுதாரித்து காரை ஒருவழியாக நிதானத்துக்கு கொண்டுவந்து விட்டேன்.

ஒரு பெரிய விபத்திலிருந்து தப்பினோம் என்றுதான் சொல்லவேண்டும். இந்த மாதிரியான திரில்லிங்கான அனுபவங்களையெல்லாம் இந்த படம் கொடுத்துள்ளது என்று கூறினார். 

 


Post your comment





Related News
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions