'என்னை அறிந்தால்' திரைக்கதை யுத்தி சரியா...?

Bookmark and Share

'என்னை அறிந்தால்' திரைக்கதை யுத்தி சரியா...?

'என்னை அறிந்தால்' படம் நேற்று பரபரப்பான ஆர்ப்பாட்டத்துடன் வெளியானது. படத்தைப் பற்றி முதல் நாளான நேற்று பாசிட்டிவ்வான கருத்துக்களே பரவலாக வெளியானது.

ஆனாலும், படத்தின் திரைக்கதையை சொல்லியிருக்கும் விதம் கொஞ்சம் குழப்பத்தைத் தருவதாகக் மற்றொரு கருத்தும் எழுந்துள்ளது. காதைத் தொட வேண்டுமென்றால் நேரடியாகப் போய்த் தொடாமல் சுற்றி வளைத்து தொட்டது போலத்தான் இருக்கிறது என்ற கமெண்ட்டுகளும் எழுந்துள்ளது.

ஒரு படம் என்பது சென்னையிலும் ஓட வேண்டும் சிவகாசிக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சின்ன ஊரிலும் ஓட வேண்டும். அப்போதுதான் அந்தப் படம் மிகப் பெரும் வெற்றியைப் பெறும்.

இந்தப் படத்தைப் பொறுத்தவரையில் “கமல்ஹாசன் பேசற மாதிரியே புரியாம எடுத்திருக்காங்க” என்ற சில கமெண்ட்டுகளும் நம் காதுகளில் விழுந்துள்ளன. படத்தின் ஆரம்பத்தில் அனுஷ்கா கொஞ்சம் கதை சொல்கிறார், அதன் பின் அஜித் சொல்கிறார், இடையில் த்ரிஷாவும் சொல்கிறார், கடைசியாக அருண் விஜய்யும் சொல்கிறார்.

இப்படி பின்னணிக் குரலில் அந்தந்த கதாபாத்திரங்களே படத்தின் திரைக்கதையை நகர்த்தும் யுத்தியை கௌதம் மேனனின் படங்களில் அதிகம் பார்க்கலாம். இது 'சிட்டி' ரசிகர்களுக்கு வேண்டுமானால்  புரியும்படியாகவும், ஸ்டைலிஷாகவும் இருக்கலாம்.

ஆனால், அனைத்து ரசிகர்களுக்கும் புரியுமா என்பது மாநகரங்களைத் தவிர மற்ற ஊர்களில் உள்ள தியேட்டர்காரர்களுக்குக் கொஞ்சம் குழப்பமாக இருக்கிறதாம். ஒருவேளை படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்தால்தான் புரியும் என்ற நோக்கத்தில் ஒரு முறைக்கு இருமுறை ரசிகர்களை வர வைக்கும் திட்டமாக இருக்குமோ....?


Post your comment





Related News
சுஜா வருணி திருமணத்தை நடத்தி வைக்கும் கமல்
விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்
சிவாஜி பேரன் - சுஜா வருணி நவம்பரில் திருமணம்
கஷ்டமாக இருந்தாலும் அனுபவம் பிடித்திருந்தது - அனுஷ்கா ஷர்மா
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
பலரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பிரபல காமெடி நடிகர்- ஒருவேளை இவரும் இருப்பாரோ
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions