6 மாத அக்ரிமெண்டில் சிக்கிய அருந்ததி நாயர்!

Bookmark and Share

6 மாத அக்ரிமெண்டில் சிக்கிய அருந்ததி நாயர்!

பொங்கி எழு மனோகரா படத்தில் அறிமுகமானவர் கேரளத்து நடிகை அருந்ததி நாயர். இர்பான்-சிங்கம்புலி முக்கிய வேடத்தில் நடித்த அப்படத்தை ரமேஷ் ரங்கசாமி இயக்கினார். ஆனால் எதிர்பார்த்தபடி படம் ஓடவில்லை.

அதனால் சில வாரங்கள் சென்னையில் முகாமிட்டிருந்த அருந்ததி நாயர், தோல்வி முகத்துடன் பின்னர் கேரளத்துக்கு திரும்பிச்சென்று விட்டார். அதேசமயம், தன்னை தேடிவந்த சில சின்ன பட்ஜெட் படங்களை ஏற்றுக்கொள்ளாமல் ஓரங்கட்டி வந்த அவர், பெரிய நடிகர்களின் படங்களுக்காக கேரளாவில் இருந்தபடியே கல்லெறிந்து வந்தார்.

அப்படி எறிந்தபோது கிடைத்த படம்தான் விஜய் ஆண்டனி நடிக்கும் சைத்தான். இந்த படத்தில் நடிப்பதற்கு அவரிடம் நேரடியாக விஜய் ஆண்டனியே தொடர்பு கொண்டு பேசினாராம்.

ஆனால், அருந்ததி நாயரை 6 மாதத்துக்கு அக்ரிமெண்டு போட்டு விட்டாராம். இந்த படத்தில் கமிட்டான பிறகு இன்னும் 6 மாதங்களுக்கு எந்த படத்திலும் கமிட்டாகக்கூடாது என்று கண்டிசன் போட்டு விட்டாராம்.

அப்போது, அவர் படத்தில் சான்ஸ் கிடைத்ததே பெரிய விசயம் என்ற சந்தோசத்தில் ஒப்பந்தமாகி விட்டாராம் அருந்ததி நாயர். ஆனால், இப்போதுப் பார்த்தால் கதாநாயகிக்கு அதிகபட்சம் 15 நாட்கள்தான் படப்பிடிப்பே இருக்கும்.

அப்படியிருக்க இந்த படத்தில் 6 மாதத்துக்கு வேறு படத்தில் ஒப்பந்தமாக முடியாத அளவுக்கு அக்ரிமெண்டில் சைன் போட்டு விட்டோமே என்று பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் அருந்ததி நாயர்.

மேலும், பொங்கி எழு மனோகரா படம் வெளியான நேரத்தில் யாருமே பட விசயமாக தொடர்பு கொள்ளாத நிலையில், இப்போது விஜய் ஆண்டனி புக் பண்ணிய பிறகுதான் அவரை விட பெரிய ஹீரோக்களின் படங்களில் நடிக்க அருந்ததி நாயரை தொடர்பு கொண்டு பேசுகிறார்களாம்.

இதனால் அவசரப்பட்டு அக்ரிமென்டில் சிக்கிக்கொண்டேனே என்று புலம்பிக்கொண்டிருக்கிறார் அவர்.

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions