முதல் படத்திலேயே தமிழில் டப்பிங் பேசும் அருந்ததி நாயர்!

Bookmark and Share

முதல் படத்திலேயே தமிழில் டப்பிங் பேசும் அருந்ததி நாயர்!

‘பிச்சைக்காரன்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய் ஆண்டனி தமிழ்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆகி இருக்கிறார். இவர் தற்போது நடித்து வரும் ‘சைத்தான்’ படமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் விஜய் ஆண்டனி ஜோடியாக அருந்ததி நாயர் நடித்து வருகிறார்.

அருந்ததி நாயர் தமிழில் நடிக்கும் முதல் படம் இது. ஆனால் இந்த படத்திலேயே இவர் காட்சிகளில் இடம் பெறும் வசனத்தை தமிழில் ‘டப்பிங்’ பேசுகிறார். மலையாள நடிகையாக இருந்தாலும் தமிழை தெளிவாகவும், சரளமாகவும் இவர் பேசுகிறார். இதை கவனித்த விஜய் ஆண்டனி ‘சைத்தான்’ படத்தின் டைரக்டர் பிரதீப் ஆகியோர் அருந்ததி நாயரை அவரது சொந்த குரலில் டப்பிங் பேச சொல்லி விட்டார்கள்.

இதுபற்றி கூறிய அருந்ததிநாயர், “ என்னுடைய அப்பா கேரளாவை சேர்ந்தவர். ஆனால் எனது அம்மா தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர். என் அம்மா தமிழில் பேசுவதால் நானும் எளிதாக தமிழ் பேசக்கற்றுக்கொண்டேன். நான் நடிக்க வருவதற்கு முன்பே எனக்கு தமிழ் பேசத்தெரியும். இதனால் தான் எனக்கு ‘சைத்தான்’ படத்தில் டப்பிங் பேச வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார்.

இதன்மூலம் முதல் படத்திலேயே தமிழில் பேசும் மலையாள நடிகை என்ற பெருமை அருந்ததி நாயருக்கு கிடைத்திருக்கிறது.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!
நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ் படத்தில் நடிக்கும் மாளவிகா நாயர்
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions