பெங்களூருக்கு திரும்பிச்சென்ற அருந்ததி!

Bookmark and Share

பெங்களூருக்கு திரும்பிச்சென்ற அருந்ததி!

வெளுத்துக்கட்டு அருந்ததி நாய்கள் ஜாக்கிரதை, தொட்டால் தொடரும் படங்கள் திரைக்கு வந்தால் தனது கேரியரே டோட்டலாக மாறிவிடும் என்றுதான் எதிர்பார்த்திருந்தார்.

ஆனால், அந்த படங்களில் நாய்கள் ஜாக்கிரதை வெற்றி பெற்றபோதும், அதையடுத்து அருந்ததிக்கு தமிழில் ஒரு படம்கூட புதிதாக புக்காகவில்லை. அதோடு, அவர் நடித்து வந்த சரவணப்பொய்கை, வெற்றி, டக்கர் போன்ற படங்கள் திரைக்கு வரும் நிலையில் இல்லை.

அதனால் இனிமேலும் கோலிவுட்டை நம்பி இருப்பதில் லாபம் இல்லை என்று முடிவு செய்து சென்னை வளசரவாக்கத்தில் தான் தங்கியிருந்த வீட்டை காலி பண்ணி விட்டு சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிச்சென்று விட்டார் அருந்ததி.

ஏற்கனவே கன்னடத்தில் அந்தார்யா, அக்ராஜா உள்பட 4 படங்களில் நடித்திருக்கும் அருந்ததி, தொடர்ந்து அங்கு நடிப்பதற்காக பட வேட்டையில் வரிந்து கட்டியுள்ளாராம்.

இந்த நேரத்தில், கோடம்பாக்கத்தில் இருந்து யாராவது படம் விசயமாக அவரை தொடர்பு கொண்டால், கதை மற்றும் படத்தில் நடிப்பவர்களைப் பற்றிய விவரங்களை கேட்கும் அருந்ததி, வழக்கம்போல் பிரபலமில்லாத ஹீரோக்களே அந்த கதைகளில் நடிப்பதாக சொன்னதும், முன்னணி ஹீரோ நடிப்பதாக இருந்தால் மட்டுமே சொல்லுங்கள்.

இல்லையேல் என்னை விட்டு விடுங்கள். தொடர்ந்து புதுமுகம் மற்றும் மார்க்கெட் இல்லாத நடிகர்களுடன் நடித்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று சொல்லி கட் பண்ணி விடுகிறாராம். 


Post your comment





Related News
நடிகையை நாய் கடிச்சிடுச்சிப்பா!
தெலுங்கிற்கு தாவும் அருந்ததி
டைரக்டர்களை டென்சன் செய்த அருந்ததி!
வில்லியாக நடிக்கிறார் அருந்ததி
அடுத்த நமீதா ஆகிறார் அருந்ததி!
விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்
பக்கா விலைமாது வேடத்தில் நடித்த அருந்ததி \'கூத்து\'!
போதையில் நடிகை அருந்ததியிடம் சில்மிஷங்களில் ஈடுபட்ட விமல்!
ராமகிருஷ்ணா இயக்கும் அருந்ததி2 இல் - லட்சுமி ராய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions