நடிகையை நாய் கடிச்சிடுச்சிப்பா!

Bookmark and Share

நடிகையை நாய் கடிச்சிடுச்சிப்பா!

நடிகைகளைப் பொறுத்தவரை அவர்களது வீடுகளில் நான்கைந்து நாய்கள் வரை வளர்ப்பார்கள். வெளிநாடுகளுக்கு செல்லும்போது அங்குள்ள நாய்களை வாங்கி வருபவர்கள், அந்த நாய்களை வளர்ப்பதற்கே பெரிய அளவில் செலவு செய்வார்கள்.

அதோடு, படப்பிடிப்புக்கு சென்று விட்டு வீடு திரும்பியதும் அவற்றுடன் சிறிது நேரம் கொஞ்சி மகிழ்ந்து விட்டே பிரிவார்கள். அந்த அளவுக்கு நாய்கள் மீது தனி பிரியம் காட்டுவார்கள் நடிகைகள்.

அதேபோல் நாய்களும் நடிகைகள் மீது பாசமாக இருக்கும். ஆனால், தற்போது இந்தியா பாகிஸ்தான் படத்தில் நாயகியாக நடித்துள்ள கன்னட நடிகை சுஷ்மா ராஜை அந்த படத்தில் நடித்த ஒரு பெரிய நாயை கடித்து குதறி விட்டதாம்.

இதுபற்றி அவர் கூறுகையில்,

நாய்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அவற்றுடன் அதிக அன்பாக இருப்பேன். ஆனால், இந்தியா பாகிஸ்தான் படத்தில் ஒரு காட்சியில் எனக்கு பேய் பிடித்து விடுவது போன்று நடித்தேன்.

அப்போது எனக்கு முன்பு சாமியார் உள்பட ஒரு பெரிய நாயும் இருக்கும். நான் அவர்கள் முன்பு தலைவிரி கோலத்துடன் கத்தி நடிக்க வேண்டும். அப்போது, முதலில் நான் சத்தமில்லாமல் தலையை விரித்து போட்டு ஆடியபோது அந்த நாய் எதுவும் செய்யவில்லை.

ஆனால், நான் சத்தமாக கத்தி நடித்தபோது கோபமடைந்து போன நாய் பட்டென்று என் காலில் கடித்து விட்டது. இதை சற்றும் எதிர்பார்க்காத நான் ஆடிப்போனேன். அதையடுத்து, மருத்துவமனை சென்று அதற்கான ஊசிகளை போட்டுக்கொண்டேன்.

அதிலிருந்து நாய்களை கண்டாலே எனக்கு அலர்ஜியாகி விட்டது. கூடவே பயமும் பற்றிக்கொள்கிறது என்கிறார் சுஷ்மாராஜ்.


Post your comment





Related News
பெங்களூருக்கு திரும்பிச்சென்ற அருந்ததி!
தெலுங்கிற்கு தாவும் அருந்ததி
டைரக்டர்களை டென்சன் செய்த அருந்ததி!
வில்லியாக நடிக்கிறார் அருந்ததி
அடுத்த நமீதா ஆகிறார் அருந்ததி!
விஜய்யுடன் டூயட் பாட வந்த என்னை குத்தாட்டம் போட வைத்துவிட்டார்கள் -நடிகை அருந்ததி புலம்பல்
பக்கா விலைமாது வேடத்தில் நடித்த அருந்ததி \'கூத்து\'!
போதையில் நடிகை அருந்ததியிடம் சில்மிஷங்களில் ஈடுபட்ட விமல்!
ராமகிருஷ்ணா இயக்கும் அருந்ததி2 இல் - லட்சுமி ராய்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions