சினிமாவாகிறது அருணிமா சின்ஹா வாழ்க்கை

Bookmark and Share

சினிமாவாகிறது அருணிமா சின்ஹா வாழ்க்கை

சாதனையாளர்களின் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுப்பது பாலிவுட்டில் அதிகரித்து வருகிறது. குத்துச் சண்டை வீராங்கனை மேரிகோம், தடகள வீரர் மில்கா சிங் ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக வந்திருக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள், அசாருதீன், கங்குலி ஆகியோரின் வாழ்க்கை சினிமாவாக தயாராகிக் கொண்டிருக்கிறது. சானியா மிர்சாவும், சச்சின் டெண்டுல்ரும் இன்னும் தங்கள் வாழ்க்கையை சினிமாவாக எடுக்க அனுமதி தரவில்லை.

இந்த நிலையில் அருணிமா சின்ஹாவின் வாழ்க்கையும் சினிமாவாக தயாராக இருக்கிறது. கொள்ளை கும்பலால் ரெயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் ஒரு காலை இழந்த அருணிகா சின்ஹா செயற்கை காலுடன் மலையேற்ற பயிற்சி பெற்று எவெரெஸ்ட் சிகரத்தை தொட்டார்.

எவரெஸ்ட் சிகரம் தொட்ட முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற சாதனையை படைத்தார்.  தற்போது அவரது வாழ்க்கை, ரெயில் சம்பவம், இமயமலைய ஏறிய அனுபவம் ஆகியவற்றை திரைக்கதையாக்கி படமாக்க இருக்கிறார் இந்திப் பட இயக்குனர் பர்ஹான் அக்தர்.

இதற்கு அருணிமா சின்ஹாவும் ஒப்புதல் வழங்கி விட்டார். இதில் நடிக்க நிஜமாகவே ஒரு காலை இழந்து செயற்கை கால் பொருத்தி நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார் பர்ஹான். நடிகை கிடைத்ததும் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறார். 


Post your comment





Related News
பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு
முன்னணி நடிகரை இயக்கும் பிரபு தேவா, ஆனால் அஜித் இல்லை - வேறு யார்னு பாருங்க.!
தனது திருமண நிச்சயதார்த்த சர்ச்சை யை பற்றி விளக்கம் அளித்த சோனாக்ஷி சின்ஹா
வாரிசு நடிகைக்கும், ரகசிய காதலருக்கும் நிச்சயதார்த்தமா?
Sex Toy' - இந்த வார்த்தையால் ரஜினி ஹீரோயினுக்கு வந்த பிரச்சனை
நீருக்குள் படுத்திருக்கும் பிரபல நடிகை- ஆனால் யார் என்று தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்
விஜய்யுடன் நடிக்க தயக்கமா? சோனாக்ஷி கூறிய பதில்
பாலிவுட் ‘கான்’களை மிரளவைத்த ரஜினி நாயகி!
புரொமோஷனல் பாடலை பாடிய சோனாக்ஷி!
வருத்தத்தில் இருக்கும் சோனாக்ஷி சின்ஹா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions