வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்

Bookmark and Share

வயதான கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண்ராஜா காமராஜ்

ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘கபாலி’ படத்தில் புகழ்பெற்ற ‘நெருப்புடா’ பாடலை எழுதி, பாடியவர் அருண்ராஜா காமராஜ். இவர் பாடகர், பாடலாசிரியர் மட்டுமில்லாமல் நடிப்பின் மீதும் ஆர்வம் கொண்ட அருண்ராஜா காமராஜ் ராஜா ராணி, மான் கராத்தே, பென்சில் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், முதன்முறையாக ‘மரகத நாணயம்’ படத்தின் மூலம் முழுநேர கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிப்பது குறித்து அருண்ராஜா காமராஜ் கூறும்போது,

இப்படத்தில் நான் முதன்முறையாக வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். இப்படத்தில் நரை முடியோடு நடித்திருக்கிறேன். மரகத நாணயம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும். இப்படத்தில் ஒலி மற்றும் குரல்தான் தனித்துவமான சிறப்பம்சம். ஆகையால், குரல் மாற்றி பேசும் என்னுடைய திறமைதான் இப்படத்தில் நான் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. மரகத நாணயம் என்னுடைய திரை வாழ்வில் அதிர்ஷ்ட கல்லாக விளங்கும் என்று முழுமையாக நம்புகிறேன் என்றார். 


Post your comment





Related News
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
எனது அருமைமிக்க இதயதளபதி அண்ணா... - விஜய்க்கு, அருண்ராஜா காமராஜ் நன்றி
சிவகார்த்திகேயன் தயாரிக்கும் படத்தை பற்றிய முக்கிய தகவல்.!
தயாரிப்பாளராக மாறிய சிவகார்த்திகேயன்!
பிரபல நடிகருக்கு போன் செய்து வாழ்த்து கூறிய விஜய்- நடிகரே வெளியிட்ட தகவல்
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது
ஆணுறை பற்றி கூறி ஜாதிக்கு அருண்ராஜா காமராஜ் விளக்கம்
விஜயிடம் குட் சர்ட்டிஃபிகேட் வாங்கிய அருண்ராஜா காமராஜுக்கு விருது!
காமராஜ் படத்தில் நடித்த சசிபெருமாளுக்கு இயக்குனர் இரங்கல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions