ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது

Bookmark and Share

ஜல்லிக்கட்டு கூட்டணி நெடுவாசலுக்காகவும் இணைகிறது

ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகர், நடிகைகளில் ஜி.வி.பிரகாஷும் முக்கியமானவர். இவர் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தில் நேரிடையாக கலந்துகொண்டு அனைவருக்கும் ஆதரவு கொடுத்தார். அடுத்ததாக, ஜல்லிக்கட்டை வலியுறுத்தி ‘கொம்பு வச்ச சிங்கமடா’ என்ற பாடல் ஒன்றையும் உருவாக்கினார்.

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, அந்த பாடலை எழுதி பாடியவர் அருண்ராஜா காமராஜ். இருவரின் கூட்டணியில் வெளிவந்த அந்த பாடல் அனைவரின் மத்தியிலும் பெரும் வரவேற்பு பெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு வலுவாகவும் அமைந்தது. இந்நிலையில், இந்த கூட்டணி தற்போது நெடுவாசலுக்காகவும் இணையவிருக்கிறது. 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவேண்டும் என்று நெடுவாசலில் விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தரும் வகையில் ஜி.வி.பிரகாஷும், அருண்ராஜா காமராஜும் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்கவுள்ளார்கள். இந்த பாடல் பதிவு விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படுகிறது. 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions