ஆக்‌ஷன் படங்களில் முத்திரை பதிக்க ஆசை : அருந்ததி நாயர்

Bookmark and Share

ஆக்‌ஷன் படங்களில் முத்திரை பதிக்க ஆசை : அருந்ததி நாயர்

‘பொங்கி எழு மனோகரா’ படத்தில் நடித்தவர் அருந்ததி நாயர். தற்போது ‘விருமாண்டியும் சிவனாண்டியும்’ ‘சைத்தான்’ படங்களில் நடித்து வருகிறார். அடுத்து வித்தார்த் நடிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். 

வேறு சில படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்தள்ளது. தனது பட அனுபவம் பற்றி கூறிய அருந்ததி நாயர்.... நான் நயன்தாராவின் ரசிகை. நடிப்பில் அவரை பின்பற்றுகிறேன். என்றாலும், கவர்ச்சியில் அளவை தாண்டமாட்டேன். 

அனுஷ்கா போன்று அதிரடி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது எனது திரைஉலக கனவு. அவர் நடித்த ‘அருந்ததி’, ‘ருத்ரமா தேவி’ படங்களைப் பார்த்து, ஆச்சர்யப்பட்டேன். இந்த படங்களில் அழுத்தமான நடிப்பை பதிவு செய்திருந்தார். 

ஆக்‌ஷன் ஹீரோக்களுக்கு இணையாக தனது பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். என்னை நடிப்பில் மிரட்டிய முதல் நடிகை அனுஷ்காதான். நான் 5 அடி 8 அங்குல உயரம் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்களும் நான் ஆக்‌ஷன் கதைகளுக்கு பொருத்தமான நாயகியாக இருப்பேன் என்று சொல்கிறார்கள். எனவே வரும் காலத்தில் ‘ஆக்‌ஷன்’ கதைகளில் நடித்து முத்திரை பதிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions