மீண்டும் சித்தார்த் அபிமன்யூவாக களம் இறங்கும் அரவிந்த்சாமி!

Bookmark and Share

மீண்டும் சித்தார்த் அபிமன்யூவாக களம் இறங்கும் அரவிந்த்சாமி!

‘தனி ஒருவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு ரீஎன்ட்ரி ஆனவர் அரவிந்த் சாமி. இதில் இவர் வில்லனாக நடித்திருந்தார்.

இவர் நடித்த சித்தார்த் அபிமன்யூ கதாபாத்திரம் அதிகம் பேசப்பட்டது. ஜெயம் ரவி கதாநாயகனாகவும் நயன்தாரா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். மோகன் ராஜா இப்படத்தை இயக்கியிருந்தார்.

ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சூப்பர் ஹிட்டானது. மேலும் இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் இப்படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. இதில் ராம்சரண் தேஜா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரித்சிங் நடிக்கிறார். இதில் மீண்டும் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. இதற்கு 'துருவா' என்ற தலைப்பு வைத்திருக்கிறார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு ஏற்றவாறு மோகன் ராஜா கதை எழுதியிருக்கிறார். சுரேந்தர் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். தமிழுக்கு இசையமைத்த ஆதியே தெலுங்கு ரீமேக் படத்திற்கும் இசையமைக்கின்றார். 


Post your comment





Related News
சர்கார் கொண்டாட்டம் ஆரம்பம் - பட நிறுவனம் அறிவிப்பு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
எச்.ராஜாவின் பேச்சைக் கேட்டு வாயை மூடி நிற்கிறது போலீஸ் - நடிகர் சித்தார்த்
பிரபல திரைப்பட நடிகர் கேப்டன் ராஜூ மாரடைப்பால் மரணம்
நடிகை ராதிகா ஆப்தேவிடம் லிப்டில் அத்துமீறிய நடிகர்
நடிகை போலீசில் புகார் - சின்னத்திரை உதவி இயக்குநர் தீக்குளித்து தற்கொலை
கேரள கன்னியாஸ்திரி விவகாரம் - பத்திரிகையாளரிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் மோகன் லால்
இனி சினிமாவில் மட்டும் தான் நடிப்பேன் - கியாரா அத்வானி
மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது - ஆரவ்
கீர்த்தி சுரேசை புகழும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions