தனி ஒருவன் அரவிந்த்சாமி நடிக்கும் முதல் இந்தி படம்!

Bookmark and Share

தனி ஒருவன் அரவிந்த்சாமி நடிக்கும் முதல்  இந்தி படம்!

அரவிந்த் சாமி நடித்த ‘ரோஜா’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டிருந்தாலும், முதன்முறையாக நேரடி இந்தி படத்தில் ஒன்றில் அவர் நடிக்கவுள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘தளபதி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அரவிந்த்சாமி. இப்படத்தில் அரவிந்த்சாமி கலெக்டராக நடித்திருந்தார்.

அதன்பின்னர் ‘ரோஜா’, ‘பம்பாய்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பின்னர், எந்த படங்களிலும் நடிக்காமல் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இதையடுத்து, இவருக்கு வில்லன் வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் தற்போது ‘தனி ஒருவன்’ தெலுங்கு ரீமேக், ‘ஜெயம்’ ரவியுடன் மீண்டும் இணைந்து ‘போகன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேரடி இந்தி படத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளாராம். ‘டியர் டாட்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்பபடத்தை அறிமுக இயக்குனர் தனுஜ் ப்ராமர் இயக்கவுள்ளார்.

அரவிந்த் சாமி நடித்த ‘ரோஜா’, ‘பம்பாய்’ ஆகிய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டிருந்தாலும், அரவிந்த் சாமி நேரடியாக இந்தி படத்தில் நடிப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் தற்போது இணையதளங்களில் வெளியாகியுள்ளது. 

 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் " கொம்பு"
எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!
இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு
பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions