அரவிந்த்சுவாமி அழகான நடிகர் - நயன்தாரா

Bookmark and Share

அரவிந்த்சுவாமி அழகான நடிகர் - நயன்தாரா

அரவிந்த்சாமி ஹீரோவாக நடித்து வந்த காலத்திலிருந்து இப்பொது வரை ஏராளமான ரசிகைகள் அவருக்கு இருக்கிறனர். அந்த வகையில், சமீபத்தில் அவர் நடித்த தனிஒருவன் படத்தின் நாயகியாக நயன்தாரா இதுபற்றி, “அரவிந்த்சுவாமியை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை யாருக்குமே பிடிக்காமல் இருக்காது.அப்படியொரு அழகான நடிகர் அவர்.

மேலும், தனிஒருவன் படத்தில் ஜெயம்ரவி நாயகன் என்பதுதான் எனக்கு முதலில் தெரியும். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போதுதான் ஒருநாள் அரவிந்த்சுவாமி சார் வில்லனாக நடிப்பதாக கூறினார்கள்.

நான் ரொம்ப சந்தோசமாகி விட்டேன். காரணம், அவர் ஹீரோவாக நடித்த படங்கள் கேரளாவில் ரிலீசாகும்போது ஒன்றுக்கு பல தடவை நான் தியேட்டர்களுக்கு சென்ற பார்த்து ரசித்திருக்கிறேன். அதனால் அவர் நடிக்கும் படத்தில் நானும் நடிப்பது பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.

அதனால், ஒருநாள் தனி ஒருவன் டைரக்டர் மோகன்ராஜாவிடம் பேசிக்கொண்டிருந்தபோது, அரவிந்த்சாமி சாருடன் எனக்கு காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அப்போது ஒரேயொரு காட்சி உள்ளது என்றார்.  

எப்படியோ அவருடன் சேர்ந்து நடிக்க ஒரு காட்சியாவது கிடைத்ததே என்று சந்தோசப்பட்டேன். அவருடன் நடிக்கும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தேன். அந்த நாள் வரும்போது, அந்த காட்சியில் இதுவரையில்லாத அளவுக்கு உற்சாகமாக நான் நடித்தேன்” என்கிறார் நயன்தாரா.


Post your comment





Related News
விரைவில் இயக்குனராகும் அரவிந்த்சாமி!
இயக்குனராக களமிறங்கும் அரவிந்த் சாமி?
விஜய், சூர்யா, விக்ரம் விட்ட இடத்தை பிடித்த அரவிந்த்சாமி!
போகன் படத்தில் முனிவராக நடிக்கும் அரவிந்த்சாமி?
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அரவிந்த்சாமி?
தனி ஒருவன் அரவிந்த்சாமி நடிக்கும் முதல் இந்தி படம்!
அரவிந்த் சாமி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து!
மீண்டும் அரவிந்த் சாமியுடன் மோதும் ஜெயம் ரவி!
சல்மான்கானுக்கு ஸ்டைல் வில்லானாகும் அரவிந்த்சாமி!
தனி ஒருவன் ரீமேக்கை எதிர்பார்க்கும் சல்மான்கான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions