சைக்கிள் வாங்கினால் ஆர்யாவை சந்திக்கலாம்

Bookmark and Share

சைக்கிள் வாங்கினால் ஆர்யாவை சந்திக்கலாம்

ஆர்யா இளம் ஹீரோக்களில் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர். அதற்கு முக்கிய காரணம் அவரது சைக்கிள் பயிற்சி.  தினந்தோறும் அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை 3 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 100 கி.மீ. சைக்கிளிலேயே பயணம் செய்கிறார் ஆர்யா.  

தன்னுடைய ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி,  தன்னுடைய ஃபிட்னஸிற்கும் நீண்ட நேரம் சைக்கிள் பயிற்சி முக்கியக் காரணமென்கிறார் ஆர்யா.  சைக்கிள் ஓட்டுவதை தன்னுடைய ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்று விரும்பும் ஆர்யா இது குறித்து அவர்களை உற்சாகப்படுத்தியும் வருகிறார்.

சைக்கிள் ஓட்டுபவர்களை ஒருங்கிணைத்து இதற்காக தனியாக பெரிய குரூப் ஒன்றையும் வைத்திருக்கிறார்.  இந்த குரூப்பில் சேரும் ஆட்களின் எண்ணிக்கை தினமும் அதிகமாகிக் கொண்டே வருகிறதாம்.  

ஆர்யாவை நேரில் பார்த்து அவரிடம் பழகுவதற்காகவே பல ரசிகர்கள் தற்போது புதிய சைக்கிளை வாங்கிக் கொண்டு ஆர்யாவின் குரூப்பில் இணைகின்றனர். அப்படி வருபவர்களை ஆர்யாவும் வரவேற்று அவர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.  

ஆர்யாவின் இந்த செயல் சுற்றுப்புறச் சூழலுக்கும், ஆரோக்கியத்துக்கும் பேருதவி செய்யும் என்பதில் சந்தேகமில்லை


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions