நான் பிளேபாய் அல்ல: ஆர்யா விளக்கம்

Bookmark and Share

நான் பிளேபாய் அல்ல: ஆர்யா விளக்கம்

ஆர்யாவை கதாநாயகிகளுடன் இணைந்து தொடர்ந்து வதந்திகள் வருகின்றன. நடிகைகளை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்து கொடுத்து வளைக்கிறார் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. சினிமா பட விழாக்களிலும் சக நடிகர்கள் இதுபற்றி பேசி ஆர்யாவை கேலி செய்து வருகிறார்கள். 

நயன்தாராவுக்கும் பிரபுதேவாவுக்கும் ஏற்பட்ட காதல் முறிவை ஆர்யா பிரியாணி விருந்து வைத்து கொடுத்து கொண்டாடியதாகவும் பேசப்பட்டது. இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் பரவின. 

‘நான் கடவுள்’ படத்தில் நடித்தபோது பூஜாவுடன் இணைத்து பேசப்பட்டார். கதாநாயகிகளிடம் தொடர்புபடுத்தி வரும் இதுபோன்ற கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்று ஆர்யாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:– 

என்னை பற்றி இதுபோன்ற செய்திகள் வருவது சந்தோஷம்தான். எழுதாவிட்டால்தான் என்னை மறந்து விட்டார்களோ என்று வருத்தப்பட தோன்றும். கதாநாயகிகளுடன் இணைத்து வரும் செய்திகளை மக்கள் படிக்கும்போது என்னை ‘பிளேபாய்’ என நினைக்க தோன்றும். 

ஆனால் நெருங்கிய நண்பர்களிடம் நான் அப்படி அல்ல என்று சொல்வார்கள். நான் ‘பிளேபாய்’ அல்ல. என்னுடன் நடிக்கும் கதாநாயகிகளுடன் நட்பாகத்தான் பழகுகிறேன். சொந்த விஷயங்கள் பற்றியும் பேசிக் கொள்கிறோம். 

என்னுடன் பூஜா, நயன்தாரா, அனுஷ்கா, திரிஷா போன்றோர் நடித்து இருக்கிறார்கள். அவர்கள் எல்லோருக்கும் எனக்கு நெருக்கமான தோழிகளாக இருக்கிறார்கள். அவர்களுக்கு என்னைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியும். 

நான் நடிக்கும் ஒவ்வொரு படத்தையும் சவாலாக எடுத்துக் கொள்கிறேன். அந்த படங்களுக்கு நூறு சதவீத உழைப்பை கொடுக்கிறேன். நான் நடித்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்தில் நடித்த எல்லோரும் இணைந்து ‘‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’’ என்ற படத்திலும் பணியாற்றுகிறோம். காமெடி படமாக தயாராகிறது. 

இவ்வாறு ஆர்யா கூறினார்.


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions