சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா

Bookmark and Share

சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல: ஆர்யா

நடிகர் ஆர்யா தற்போது அமீர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சந்தன தேவன்’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுந்தர்.சி இயக்கும் ‘சங்கமித்ரா’ படத்தில் நடிக்க இருக்கிறார். நடிப்பை தவிர ஆர்யா எப்போதும், தன் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதில் ஆர்வம் உள்ளவர்.

இதற்காக எந்நேரமும் ஜிம்மில் வொர்க்-அவுட், சைக்ளிங் ஆகியவையில் நேரத்தை செலவழித்து வருவார். தற்போது ஆர்யா ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் ஆர்யா தன் நண்பரிடம் ‘தம்பியின் மாமனார் எப்போது திருமணம் என்று கிண்டல் செய்துவிட்டார். அதனால், நானும் ஏப்ரல், மே-வில் திருமணம் செய்யலாம்னு இருக்கிறேன் என்று சொல்லிட்டேன்.

காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்யலாம்ல என்று நண்பர் ஆர்யாவிடம் கேட்க, ‘சுத்தி சுத்தி லவ் பண்ணிட்டேன், ஒன்னும் வேலைக்கு ஆகல... நான் என்ன வச்சுக்கிட்டா வஞ்சனை பண்றேன்' அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பேப்பரில் பெண் வேண்டும் என்று விளம்பரம் கொடுக்கலாம் என்று இருக்கிறேன்’ என்று ஆர்யா கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 


Post your comment





Related News
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்
மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா! சுற்றிவளைத்து கமல்ஹாசன் சரமாரி கேள்வி - அழுத சம்பவம்
நான் ஏன் எல்லோரையும் கொடுமைப்படுத்தினேன் தெரியுமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா வெளியிட்ட உண்மை
நெருங்கி பழகிய ஷாரிக், ஐஸ்வர்யா இடையே நடந்தது என்ன? உண்மை இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions