சர்வதேச சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா

Bookmark and Share

சர்வதேச சைக்கிள் போட்டியில் பதக்கம் வென்றார் ஆர்யா

சினிமாவில் பிசியாக நடிகராக வலம் வந்தாலும் சைக்கிளில் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த ஒருவருடமாக சைக்கிள் ஓட்டும் பயிற்சியை தீவிரமாக செய்துவந்த ‘வாடேர்ன் ருன்டன் ரேஸ்’ என்ற பெயரில் ஸ்வீடன் நாட்டில் மோட்டலா என்ற ஊரில் நடந்து வரும் போட்டியில் ஆர்யா கலந்துகொண்டார்.

அபாயகரமான வளைவுகள், ஏரிகள், குளங்கள், மலைகள், சீரற்ற எதிர்காற்று என பல்வேறு சவால்களை கடந்து 300 கிலோ மீட்டர் பந்தய தூரத்தை 15 மணி நேரத்திற்குள் முடித்தாக வேண்டும். இந்த பந்தயத்தில் கலந்துகொண்ட ஆர்யா, வெற்றிகரமாக 300 கி.மீ. தூரத்தை கடந்து பரிசு வென்றுள்ளார்.

இதுகுறிந்து ஆர்யா கூறும்போது, வாடேர்ன் ருன்டன் ரேஸில் பதக்கம் வென்றுவிட்டேன். என் கனவை நனவாக்கிய முருகப்பா குரூப்ஸ் டிஐ சைக்கிள் அருண் அழகப்பனுக்கு கோடி நன்றிகள். நான் இந்த பந்தயத்தில் வெற்றி பெறவேண்டும் என வேண்டிக்கொண்ட அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

இந்த பந்தயத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 8 மாதங்களாக ஆர்யா தீவிர பயிற்சி மேற்கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த ‘வாடேர்ன் ருன்டன் ரேஸ்’ தொடர்ந்து 50-வருடமாக நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.  

 


Post your comment





Related News
ஆர்யா-சாயிஷாவுக்கு காதல் திருமணம் அல்ல - சாயிஷா தாயார் பேட்டி
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொல்லி, திருமண அறிவிப்பை வெளியிட்ட ஆர்யா
விசாகனை மணந்தார் சவுந்தர்யா - எடப்பாடி பழனிசாமி, கமல்ஹாசன் நேரில் வாழ்த்து
மகள் சவுந்தர்யா திருமணம் - போலீஸ் பாதுகாப்பு கேட்டு லதா ரஜினிகாந்த் மனு
இந்தியன் 2 படத்தில் ஆர்யா - இளைஞர் படை மூலம் ஊழலை எதிர்க்கும் கமல்ஹாசன்
ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கு 2-வது திருமணம் - வருகிற 11-ந்தேதி நடக்கிறது
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions