ஆதிவாசியாக மாறும் ஆர்யா!

Bookmark and Share

ஆதிவாசியாக மாறும் ஆர்யா!

நான் கடவுள், புறம்போக்கு என்கிற பொதுவுடமை தவிர பெரும்பாலான படங்களில் ரொமான்டிக் ஹீரோவாகத்தான் நடித்திருக்கிறார் ஆர்யா. அதோடு சந்தானம் போன்ற காமெடியன்களை கூடவே வைத்துக்கொண்டு காதல், காமெடி கதைகளில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

ஆனால், தற்போது சந்தானம் ஹீரோவாகி விட்டதால் தனக்கேற்ற சரியான காமெடி நடிகர் கிடைக்காததால் தனது ரூட்டை மாற்ற முடிவெடுத்து விட்டார்.

அதன் முதல் முயற்சிதான் அவர் ஆதிவாசியாக நடிக்கும் படமாம்.இதுகுறித்து ஆர்யா கூறுகையில், சினிமாவில் நானும் வந்து 10 வருடங்களுக்கு மேலாகி விட்டது. காதல் கதைகளில் குறிப்பாக ப்ளேபாய் வேடங்களில்தான் அதிகமாக நடித்திருக்கிறேன்.

ஆனால் இப்போது நடிப்பில் எனக்கு நல்ல தேர்ச்சி கிடைத்து விட்டது. அதனால் இனிமேல் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க முடிவு செய்துவிட்டேன்.

அதில் முதல்கட்டமாகத்தான் மஞ்சப்பை ராகவன் இயக்கும் படத்தில் ஆதிவாசியாக நடிக்கிறேன்.இந்த வேடத்துக்காக அந்த கதாபாத்திரமாகவே மாறுவேன். படம் பார்க்கும் ரசிகர்களுக்கு என்னை ஆர்யாவாக தெரியாது.

அந்த ஆதிவாசி கதாபாத்திரமாகத் தான் தெரியும். அதற்காக சில மேனரிசங்களை உள்வாங்கி நடிக்கப்போகிறேன். மேலும், முன்பு மாதிரி நார்மலான கதைகளுடன் வரும் டைரக்டர்களிடம் வித்தியாசமான கதைகளை ரெடி பண்ணுமாறு கூறி வருகிறேன் என்கிறார் ஆர்யா.


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions