ஆர்யாவின் புதிய படத்துக்காக ஒரு கோடியில் உருவான கிராமம்!

Bookmark and Share

ஆர்யாவின் புதிய படத்துக்காக ஒரு கோடியில் உருவான கிராமம்!

‘பெங்களுர் நாட்கள்’ படத்தை தொடர்ந்து ஆர்யா நடிக்கும் புதிய படத்தை ‘மஞ்சப்பை’ புகழ் ராகவன் இயக்கி வருகிறார். ஆர்யா முதல்முறையாக காட்டுவாசியாக நடிக்கும் இப்படத்துக்கு கடம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல் அருகில் உள்ள தாண்டிக்குடி கிராமத்தில் நடந்தது. இதற்காக சுமார் 100 ஏக்கரில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு மலைவாழ் மக்களின் கிராமத்தை ஆர்ட் டைரக்டர் மோகன் உருவாக்கியிருந்தார். இதில் தொடர்ச்சியாக 40 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

இப்படத்தில் நடிப்பதற்காக அவர் தனது உடல் எடையை 88 கிலோ வரை அதிரடியாக ஏற்றி மிரட்டலான ஒரு லுக்கிற்கு மாறியுள்ளார். ஆர்யா ஜோடியாக கேத்தரின் தெரசா நடிக்கும் இப்படத்தை ஆர்யாவின் நண்பர் ஜீவா தயாரிக்கிறார். மேலும் யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
மறுமண அழைப்பிதழை திருப்பதி கோவிலில் வைத்து ரஜினி மனைவி, மகள் தரிசனம்
நடிகை சாயிஷாவுடன் ஆர்யா காதல்?
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions