திகில் படத்தில் ஆர்யா!

Bookmark and Share

திகில் படத்தில் ஆர்யா!

ஆர்யா என்றாலே ரொமான்டிக் நாயகன் என்றாகி விட்டது. ஆனால் அவரோ, இதெல்லாம் கொஞ்ச காலத்துக்குத்தான் செட்டாகும். அதனால் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு ஆக்சன் ஹீரோவாகி விட வேண்டும் என்று மீகாமன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படி அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

அதனால், பாஸ் என்கிற பாஸ்கரன் பாணியிலேயே இப்போது காமெடி கலந்த காதல் கதைகளாக செலக்ட் பண்ணி நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், சமீபகாலமாக டார்லிங், காஞ்சனா-2 என பேய் படங்களே வெற்றி பெற்று வருவதால் அவரது கவனமும் திகில் கதைகள் பக்கம் திரும்பியிருக்கிறது.

முக்கியமாக சூர்யாகூட மாஸ் படத்தில் திகிலுக்கு மாறியிருப்பதால், ரசிகர்கள் விரும்பும் பாதைக்கு நாமும் மாறி விடுவோம் என்று ஜீவா சங்கர் சொன்ன ஒரு திகில் கதையில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார் ஆர்யா.

அதோடு, இதுவரை பெண் பேய்களே ஆக்ரமித்து வந்த நிலையில், தற்போது கமரகட்டு, டிமான்டி காலனி போன்ற படங்களில் ஆண் பேய்கள் களமிறங்கியருப்பதை அடுத்து, ஆர்யாவும் பேயாக நடிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.  


Post your comment





Related News
ஒரு படமாவது அவர்கூட நடிக்கணும்னு எனக்கு ஆசை இருக்கு - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் ஜோடியான ஆரி - ஐஸ்வர்யா தத்தா
காதல் படத்தில் இணைந்த பிக்பாஸ் ஜோடி
சவுந்தர்யா ரஜினிகாந்த் மறுமணம் - தொழிலதிபரை மணக்கிறார்
விளம்பரத்துக்காக பொய் சொல்கிறார் - நடிகை சுருதிஹரிகரனுக்கு அர்ஜுன் மகள் கண்டனம்
ஜெய் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்
ஓரின சேர்க்கை தீர்ப்பு: தமிழ் நடிகர்-நடிகைகள் கருத்து
சென்னையில் நடைபெற்ற "லக்‌ஷ்மி" படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு..!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
வெளியேறியபின் ஷரீக்கிடம் காதலை சொன்ன ஐஸ்வர்யா! அம்மா முன்பே ஷரீக் சொன்ன பதில்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions